பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா பாதிப்புக்கு காரணம் தமிழக அரசின் கவனக்குறைவுதான்'

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ''கொரோனா பாதிப்புக்கு காரணம், தமிழக அரசின் கவனக்குறைவுதான்,'' என, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டினார். நாமக்கல் எம்.பி., சின்ராஜ், ஓராண்டு காலம் செய்த பணிகளை இணையவழியாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி, ராசிபுரத்தில் நடந்தது. கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இணையவழி சேவையை தொடங்கிவைத்து, கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது நேரடியாக விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். தேர்தலின்போது நாமக்கல் எம்.எல்.ஏ., பாஸ்கரின் சொத்து மதிப்பை விட, தற்போது பல மடங்கு அதிகமாக உள்ளது. இது தொடர்பான புகார் எனக்கு அதிகம் வருகிறது. கொரோனா பாதிப்புக்கு காரணம், தமிழக அரசின் கவனக்குறைவுதான். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X