சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி விபத்து: முதியவர் பலி

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, மொபட் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார். குமாரபாளையம், சத்யா நகரை சேர்ந்தவர் முத்துசாமி, 73. இவர், நேற்று மாலை, 3:50 மணியளவில், 'ஸ்கூட்டி பெப்' மொபட்டில், சேலம் - கோவை புறவழிச்சாலை வட்டமலையில் இருந்து, கத்தேரி பிரிவு சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்குள்ள திருமண மண்டபம் அருகே, இவருக்கு பின்னால், சேலத்திலிருந்து கோவை நோக்கி வேகமாக வந்த லாரி, மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து, குமாரபாளையம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X