வீணாகும் காவிரி குடிநீர்: பொதுமக்கள் அதிருப்தி

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

நாமக்கல்: வளையப்பட்டியில், கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாயில் இருந்து, உபரிநீர் பெருமளவு வெளியேறி வீணாகிறது.
நாமக்கல்-திருச்சி சாலை வளையப்பட்டியில் ஒருவந்தூர்-சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து, வளையப்பட்டிக்கு கொண்டுவரப்படும் காவிரி ஆற்று நீர், பெரியவேப்பனம் வழியாக சீரப்பள்ளிக்கும், தூசூர் வழியாக பவித்திரத்திற்கும் சாலையின் அடியில் குழாய் பதிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதற்காக வளைப்பட்டி, தூசூர் சாலை உள்ளிட்ட பகுதியில் குழாய் வால்வு மற்றும் உபரிநீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அவ்வப்போது கசிந்து வரும் தண்ணீரை அப்பகுதியினர் குடம் மற்றும் தண்ணீர்கேன் மூலம் பிடித்துச்சென்று உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாளாக வளையப்பட்டி குழாயில் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து கொட்டுகிறது. பொதுமக்கள் தங்கள் குடங்களில் தண்ணீர் பிடிக்க முடியாதபடி வேகமாக கொட்டுகிறது. அந்த தண்ணீரானது மக்கள் பயன்பாடின்றி அருகே உள்ள சாக்கடையில் கலந்து வீணாகிறது. மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, குழாயில் வெளியாகும் உபரிநீரை மக்களுக்கு சென்றடையும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X