பிரிவு சாலையில் குழப்பம் அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?| Dinamalar

பிரிவு சாலையில் குழப்பம் அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

Added : ஜூன் 19, 2020
Share

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், ராசிபுரம்- திருச்செங்கோடு சாலை, மரப்பரை பிரிவு வழியாக தினமும் ஏராளமான இரு சக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, பிரிவு சாலையில் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் உள்ளது. இவ்வழியாக புதிதாக வருவோர், தாங்கள் செல்ல வேண்டிய சாலை தெரியாமல் பல கி.மீ., தொலைவு சுற்றிக் கொண்டு செல்லும் அவலம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எனவே, பிரிவு சாலையில் எந்தெந்த சாலை எப்பகுதிக்கு செல்கிறது என்பது குறித்த, அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X