பாதுகாப்பு கயிற்றால் கோவில் முன் அடிக்கடி விபத்து

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

நாமகிரிப்பேட்டை: மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே கட்டப்பட்ட கயிற்றால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நாமகிரிப்பேட்டை அருகே, மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இவ்வழியாக செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் கோவிலில் நின்று சுவாமியை வழிபட்டு செல்வர். இதற்காக கோவில் பகுதியில் சாலை நடுவே பேரிகார்டும் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த கோவிலுக்கு முன்பு காலி இடம் உள்ளது. இப்பகுதியில்தான் பூஜை பொருட்கள் வாங்குவதற்கான கடைகளும் இருக்கும். கொரோனா ஊரடங்கு அறிவித்ததில் இருந்து, பேரி கார்டை காலி இடத்திற்கு மாற்றிவிட்டனர். ஆனாலும் இவ்வழியாக செல்பவர்கள் காலி இடத்தில் மது அருந்த தொடங்கியதால், பேரி கார்டை தாண்டி இரு சக்கர வாகனத்தில் போகாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் நபர்கள், இரவு நேரத்தில் கயிறு இருப்பது தெரியாமல் காலி இடத்திற்கு செல்ல முற்படும்போது, அதில் சிக்கி விழுந்துவிடுகின்றனர். இரு நாட்களுக்கு முன் இரவு, 9:00 மணியளவில் தம்மப்பட்டியில் இருந்த வந்த வாலிபர் கழுத்தில் கயிறு வெட்டியது. பலத்த காயமடைந்த அவர், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவில் காலி இடத்தில் பொதுமக்கள் யாரும் நுழையக் கூடாது என விரும்பினால், தகரத்தை வைத்து அடைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X