பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் வெளியேற்றம்: ஈரோட்டில் 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய இரண்டு ஆலைகளின், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், பறக்கும் படை பொறியாளர் மணிவண்ணன் தலைமையில், ஈரோடு மாநகராட்சி மரவாபாளையத்தில், சோதனை நடந்தது. அப்பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய, இரண்டு ஆலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சியில், காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து, சென்னை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஈரோடு மற்றும் நாமக்கல் கலெக்டர்களை உள்ளடக்கிய உயர்மட்ட குழுவை நியமித்தது. இதன்படி மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், தாசில்தார், மாநகராட்சி அலுவலர் கொண்ட குழுவினர், சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 16, 17ல் மரவாபாளையம் எஸ்.கே.எம்.ஏ., முகம்மது இப்ராஹிம் பிரதர்ஸ் டேனிரி தோல் தொழிற்சாலை, மாணிக்கம்பாளையம் ஸ்ரீஅம்மன் டையிங் சாயத்தொழிற்சாலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இவ்விரு ஆலைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X