ஒழுங்கீன நடவடிக்கையால் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்கீன நடவடிக்கையால் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்

Added : ஜூன் 19, 2020
Share

ஈரோடு: ஒழுங்கீன நடவடிக்கையாக, கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சரக சத்துணவு திட்டம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம், ஈரோட்டில் உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சங்க செயலாளரான சபரிநாதன், 45, மூன்றாண்டாக உறுப்பினர்கள் செலுத்தும் தொகையை, முறையாக வரவு வைக்காமலும், கடன் தொகையை கூடுதலாக எழுதி, கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து துணை பதிவாளர் கானன் தலைமையில், விசாரணை நடக்கும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால், சபரிநாதனை சஸ்பெண்ட் செய்ய, சங்க தலைவரிடம் அறிவுறுத்தப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், சங்கத்தின் நலன் கருதி, மூன்று மாதத்துக்கு சபரிநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்புகளை, ஈரோடு மாவட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க எழுத்தர் செல்வகுமாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X