பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு இன்றுடன் 96 வயது நிறைவு

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் - திருமாநிலையூரை இணைக்கும் பழைய பாலம், நாளை, 97ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கரூர் நகருக்கு தெற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வருபவர்கள் அமராவதி ஆற்றை கடந்து தான் வரமுடியும். இதனால், ஆற்றில் இறங்கி கரூருக்கு மக்கள் வந்துகொண்டிருந்தனர். கடந்த, 1919 ஜூன், 30ல் பொதுப்பணித் துறை மூலம் அமராவதியில் (பழைய) பாலத்துக்கு திவான் பகதூர் ராஜகோபால ஆச்சாரியார் அடிக்கல் நாட்டினார். ஐந்து ஆண்டுகளில் கட்டுமான பணி முடிக்கப்பட்டு, 1924ல் ஜூன், 20ல் திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி பெயர் சூட்டப்பட்ட பாலத்தை, சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸ்சென் ஹாக்ஹர்ஸ்ட்டால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த, 1977ல் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தாங்கிய இப்பாலம், ஆண்டுகள் பல ஆனதால் வலுவிழந்தது. 25 ஆண்டுகளுக்கு முன், பாலத்தில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

கடந்த, 2001ல், இப்பாலத்தின் மேற்கு பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த, 2005ல் வெள்ளத்தில் அமராவதி புதிய பாலம் இடிந்த போதும், பழைய பாலம்தான் போக்குவரத்துக்கு உதவியது. புதிய பாலம் சீரமைக்கப்பட்டவுடன், பழைய பாலத்தில் இலகு ரக வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது, அங்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் தனியார் வங்கி உதவியுடன் நடை பயிற்சி மேற்கொள்ள பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் பல்வேறு பாலங்கள் வந்துவிட்டபோதும், கரூர் அமராவதி ஆற்றில் முதலில் கட்டப்பட்ட இப்பாலம், இன்றுடன் (ஜூன், 19) 96 ஆண்டுகளை நிறைவு செய்து, நாளை, 97ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X