சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடக எல்லைக்குள் நுழைந்தவர்கள் மீது போலீஸ் தடியடி

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

ஓசூர்: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநில எல்லைக்குள் செல்லும், அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு தணிக்கை செய்யப்படுவதுடன், அவர்கள் அனைவரும் மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். கர்நாடகா அரசின் கெடுபிடி காரணமாக, தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில், பல கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நடந்து செல்லும் பொதுமக்களை அனுமதித்து வந்த கர்நாடகா போலீசார், நேற்று அவர்களை எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, தடியடி நடத்தி விரட்டினர். கர்நாடகா அரசின் கடுமையான நடவடிக்கைகளால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X