பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 39.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: ஊரடங்கு காலத்தில் ஆவின் சாதனை

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

சேலம்: ஊரடங்கில், ஆவின் தினமும், 39.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
'கொரோனா' பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கால கட்டத்தில், தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள், உற்பத்தியாளர்களிடம், பாலை வாங்காமல், நுகர்வோருக்கு வழங்குவதை நிறுத்தின. ஆனால், ஆவின் நிறுவனம், அனைத்து உற்பத்தியாளர்களின் பாலை கொள்முதல் செய்து, மக்களுக்கு தட்டுப்பாடின்றி வினியோகித்தன. கடந்த பிப்ரவரியில், தினமும் ஆவின் கொள்முதல், 28.5 லட்சம் லிட்டராக இருந்தது. மே, 20ல், எட்டு லட்சம் லிட்டர் அதிகரித்து, தினமும், 36.5 லட்சம் லிட்டராக உயர்ந்தது. தற்போது, 39.10 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஊரடங்கில் மட்டும், ஆவின் பால் கொள்முதல், 10.60 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. ஆவினில் அதிகபட்சமாக, 31.50 லட்சம் லிட்டர் மட்டும் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, 39.10 லட்சம் லிட்டர் கொள்முதலால், சாதனை செய்துள்ளது. இதில், சேலம் ஒன்றியத்தில் பிப்ரவரியில், 4.85 லட்சமாக இருந்த கொள்முதல், மே மாதம், 5.31 லட்சம் லிட்டர், தற்போது, 5.73 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. நாமக்கல் ஒன்றியத்தில் பிப்ரவரியில், 1.50 லட்சம் லிட்டர், மே மாதம், 1.61 லட்சம் லிட்டர், தற்போது, 1.66 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கிலும், தட்டுப்பாடு இன்றி நுகர்வோருக்கு பால் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து, பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறுகையில், ''மாட்டு சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள், விவசாயிகள், மாடுகளை விற்க முடியாமல், பாலை கறந்து, ஆவினுக்கே வழங்குகின்றனர். தற்போது, மாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால், அதிகளவில் கன்று போட்டு, கறவைக்கு வந்துள்ளதும், ஆவின் பால் கொள்முதல் உயர்வுக்கு ஒருகாரணம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X