பொது செய்தி

இந்தியா

10 இந்திய வீரர்களை விடுவித்த சீனா

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
இந்தியா, சீனா, ராணுவம், லடாக், கல்வான், ராணுவ அதிகாரிகள், பேச்சுவார்த்தை, விடுவிப்பு, Indian soldiers, Chinese Army, india, china, stand off, ladakh clash, officials meet

புதுடில்லி: இந்தியா - சீனா இடையே நடந்த ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து, லடாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து பிடித்து செல்லப்பட்ட 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்தது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதனால், இரு தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சிலர் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மோதலின் போது இந்திய வீரர்களை சீன ராணுவம் பிடித்து சென்றதாக தகவல் வெளியானது. இதனை சீனா மறுத்திருந்தது.


latest tamil news



பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், 4 ராணுவ உயரதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
19-ஜூன்-202022:10:39 IST Report Abuse
blocked user தேசவிரோத ஊடகங்கள் லடாக்கில் முகாமிட்டு இருப்பதாக தகவல். அவர்கள் போக்கில் மோடி வீக் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்களாம்.. அதில் இந்த பத்து வீரர்களை விடுவித்த கதையும் ஒன்று...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-ஜூன்-202017:48:09 IST Report Abuse
Darmavan இந்த செய்தி கண்டிக்க தக்கது விஷமத்தனமானது.இரண்டு நாடுகளும் இதை மறுத்தபோது செய்திகள் தெரிவிக்கின்றன என்பது போய் செய்தி கண்டனத்துக்குரியது.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
19-ஜூன்-202017:04:06 IST Report Abuse
Chandramoulli இரண்டு அரசு சார்பில் வரும் செய்திகளை தான் நம்ப முடியும். மேலும் மூவர் மரணம் சிறிது நேரத்தில் 17 நபர் மரணம் என்றும் எந்த வித ஒளிவு மறைவு இல்லாமல் மக்களுக்கு தெரியப்படுத்தியது இந்திய அரசு. இதில் சீனா 43 நபர்கள் மரணம் என்ற செய்தியை இப்போது வரை அறிவிக்கவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X