எங்களை ஏன் அழைக்கவில்லை?: ஆம்ஆத்மி கோபம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
AAP, Sanjay Singh, Meeting, Modi, Aam Aadmi, AAP, all-party meeting, PM Modi, Party leaders, ஆம்ஆத்மி, அனைத்துக்கட்சி, கூட்டம், சஞ்சய்சிங், மோடி, புறக்கணிப்பு

புதுடில்லி: சீனாவுடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடத்தும் பிரதமர் மோடி, தங்களுக்கு அழைப்பு விடுக்காமல், திட்டமிட்டே புறக்கணித்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.

லடாக் எல்லை பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூன் 19) மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்., உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்கின்றன. இதில் ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.


latest tamil news


இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது: மத்தியில் விசித்திரமான ஈகோ பிடித்த அரசு ஆள்கிறது. டில்லியில் ஆளும் கட்சி, பஞ்சாபில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம்ஆத்மி கட்சி, 4 எம்.பி.,களையும் கொண்டுள்ளது. இந்தியா-சீனா எல்லை மோதல் போன்ற முக்கிய விவகாரத்தில் ஆம் ஆத்மியின் கருத்துகள் தேவையில்லையா? பிரதமர் அந்தக் கூட்டத்தில் என்ன கூறப்போகிறார் என்று நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.


latest tamil news


தேசிய அவசரகாலத்தின் போது, ​​அனைத்து கட்சிகளும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என பாஜ.,வினர் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் செயல் வேறாக உள்ளது. சீனாவுடனான மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடத்தும் பிரதமர் மோடி திட்டமிட்டே முக்கிய கட்சிகளை புறக்கணித்துள்ளார். எங்களை அழைக்காததற்கு என்ன காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு பதிலாக, யாரை அழைக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை அறிய பாஜ., கணித சூத்திரங்களைப் பயன்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டவசமானது,' எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
19-ஜூன்-202019:54:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. பேசாமே AAP, RJD, AMMIM, கட்சிகளையும் கூப்பிட்டு தொலைத்திருக்கலாம்... இன்னொரு மூணு பேர்தானே... இந்த அனாவசிய கௌரவப் பிரச்சினை வந்திருக்காது..
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
19-ஜூன்-202019:40:19 IST Report Abuse
vns நமது ராணுவம் பாகிஸ்தானின் எல்லை கடந்து பலாக்கொட்டில் குண்டு வீசியபோது அதை நடக்கவில்லை என்று கூறிய கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி பார்ட்டி இப்போது பிரதமர் கூறுவதை நம்பவா போகிறார்கள். அவர்களை கூப்பிடாதது நல்லதுதான். சீன எதிரிகளுக்காக உழைக்கும் கம்யூனிஸ்டுகளின் தோழர்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-ஜூன்-202017:59:02 IST Report Abuse
வெகுளி எங்க அருணனை கூப்பிடுவீங்களா மாட்டீங்களா?.... கூட்டத்தில போண்டா சமோசா மிகுதியானால் யார் பொறுப்பு?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X