புலம் பெயரும் சென்னை மக்களின் அவலம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னையை விட்டு அந்த சரக்கு வாகனம் செங்கல்பட்டு சோதனைச் சாவடியைத் தாண்டி அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.அவசரமாக வீட்டைக்காலி செய்யும் போது என்னன்ன எடுக்க முடியுமோ? அந்த தட்டுமுட்டு சாமான்கள் வாகனத்தின் பின்னால் நிரப்பப்பட்டு இருக்கிறது.சாமான்களுக்கு போக மிஞ்சிய கொஞ்சூண்டு இடத்தில் அப்பாவும் பிள்ளையும் ஒண்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு
latest tamil news
சென்னையை விட்டு அந்த சரக்கு வாகனம் செங்கல்பட்டு சோதனைச் சாவடியைத் தாண்டி அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.latest tamil news


அவசரமாக வீட்டைக்காலி செய்யும் போது என்னன்ன எடுக்க முடியுமோ? அந்த தட்டுமுட்டு சாமான்கள் வாகனத்தின் பின்னால் நிரப்பப்பட்டு இருக்கிறது.
சாமான்களுக்கு போக மிஞ்சிய கொஞ்சூண்டு இடத்தில் அப்பாவும் பிள்ளையும் ஒண்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் முன்னாள் குழந்தைகளுடன் குடும்பத் தலைவி.
இவ்வளவு நேரத்தில் உங்களுக்கு புரிந்திருக்கும் மிஞ்சிய பொருட்களுடன் அவசர அவசரமாக வீட்டைக்காலி செய்து கொண்டு ஒரு குடும்பம் சென்னையை காலி செய்து கொண்டு போகிறது என்று.
சென்னைக்கு வந்தால் பிழைக்கலாம் என்று பிறந்த ஊரை விட்டு வந்த குடும்பங்களில் இதுவும் ஒன்று, இப்போது சென்னையில் இருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று செல்கின்ற பல ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இதுவும் ஒன்று.
இதற்கு கொரோனா மீது மட்டும் பழி போடுவது சரியாக இருக்காது
வேலையும் இல்லை, தொழிலும் இல்லை , மருந்து மாத்திரை வாங்கக்கூட காசில்லை குடும்பத்தை விட்டு பிரித்துவிடுவார்களோ? என்பதால் தும்மவும் இருமவும் கூட பயம்.
மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கூட கொடுக்காத அரசாங்கம் வாடகையை விட்டுக்கொடுக்கச் சொல்லி பாடம் நடத்துகிறது, வாடகை கொடுக்காமல் ஒரு மாதம் இருந்து பாருங்கள் உங்கள் மரியாதை மண்ணுக்கும் கிழே போகும் இந்த வேதனையை எல்லாம் வாடகை வீட்டில் இருந்தால் மட்டுமே உணரமுடியும் மேலும் வாடகை வாங்குபவர்களையும் குறை சொல்ல முடியாது அதை வாங்கித்தான் பலர் இஎம்ஐ கட்டுகிறார்கள் சாப்பாட்டுக்கு செலவு செய்கின்றனர்.
சரி சொந்த ஊருக்கு போய் கஞ்சி குடித்தாவது வாழ்வோம் என்று நினைத்தால் போகவும் வழியில்லை, இ-பாஸ் எடுக்கவும் அறிவில்லை, குறுக்கு வழியில் செல்லவும் வசதியில்லை.
ஏம்ப்பா இன்னும் கஷ்டப்படுறா ஊருக்கு வந்துடு என்று சொன்ன சொந்த பந்தங்கள் இப்போது சென்னையில் இருந்து வந்துவிடாதே எங்க நிம்மதி போய்விடும் என்று ஏதோ வூகானில் இருந்து வருவதாக சொன்னது போல எச்சரிக்கின்றனர் கொரோனாவிற்கு முன் சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,பாசமும் இல்லை அவ்வளவு ஏன் பரிதாபம் கூட இப்போது இல்லை.
சென்னைக்காரர்கள் மொத்த பேருமே கொரோனா நோயாளிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்திய பிறகு இப்போது சென்னையில் இருக்கவும் முடியவில்லை போகவும் வழியில்லை.
இன்றைய தேதிக்கு சென்னையில் இருந்து பிகார்,உத்திரபிரதேசத்திற்கு கூட போய்விட முடியும் ஆனால் திருச்சி மதுரை என்று தென்மாவட்டங்களுக்கு போய்விட முடியாது காரணம் நீங்கள் கொரோனாவை கொண்டு வந்துவிடுவீர்கள் என்பதால்.
உயிர்பிழைக்க ஒடிவருபவர்கள் நோயுடன் வருவார்கள் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய அபத்தம் அப்படியே வந்தாலும் பத்து நிமிடத்தில் ரிசல்ட் தெரியும் என்ற இன்றைய சூழலில் வேண்டிய மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு முடிந்தால் அனுமதியுங்கள் இல்லையேல் தனிமைப்படுத்துங்கள் அதைவிட்டு நுழையவே கூடாது என்பது மனிதாபிமானத்தின் மீது காட்டும் வன்முறையே அன்றி வேறில்லை.
தீபாவளி பொங்கல் போன்ற நீண்ட விடுமுறை நாட்களில் பலர் சொந்த ஊருக்கு போவார்கள் அப்போது சென்னை எப்படி அமைதியாக இருக்குமோ அதே போன்ற அமைதிதான் இப்போதும் இருக்கிறது ஆனால் இப்போது இருப்பது மயான அமைதி.
எப்படியாவது ஊருக்கு போகவேண்டும் என்று அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் மிச்சம் மீதி இருப்பவர்களை நல்லபடியாக அனுப்பிவையுங்கள் அந்த எளிய நெஞ்சங்கள் கொஞ்சமாவது நிம்மதியை உணரட்டும்.
-எல்.முருகராஜ்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Sanjay - Chennai,இந்தியா
26-ஜூன்-202003:30:05 IST Report Abuse
R Sanjay இதில் பெரும் பங்கு ஊடங்கங்களுக்கு உண்டு. கொரோனா கொரோனா கொரோனா கொரோனா கொரோனா என்று ஊதி ஊதி பெரிசாக்கிவிட்டார்கள்? இந்த உலகில் இந்தியாவில் மாநிலங்களின் எத்தனை எய்ட்ஸ் கான்செர் நோயாளிகள் இருக்கிறார்கள் என்று எந்த ஊடகமாவது கூறி இருக்கிறார்களா? ஏன் கொரோனாவிற்கும் மட்டும் இப்படி? கொரோனா வந்தால் குணமடையாமுடியாதா? பிறகு எப்படி மருந்தில்லாமல் பாதி பேர் குணமடைந்து இருக்கிறாரார்கள். எல்லாவற்றிக்கும் நம் சித்த மருத்துவத்திற்கு மருந்து இருக்கிறது என்ன அதற்க்கு காப்புரிமை கிடையாது செடி கொடி மரத்தில் இருந்து மருந்து கொடுத்தால் அதற்க்கு எப்படி காப்புரிமை கொடுப்பது என்று கேட்பார்கள். ஆனால் பல போர்முலா போட்டு செயற்கை முறையில் மருந்து தயாரித்தால் மட்டுமே காப்புரிமை. இந்த ஒரு காப்புரிமை மட்டுமே கிடைத்துவிட்டால் போதும் அந்த நிறுவனம் தான் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக வரும் அதற்க்கு தான் இன்று போட்டி. மற்றும் நம்மில் பலபேர் மாண்ட பிறகு தான் அந்த மருந்து வெளியே வரும். AVENGERS INFINITY WAR இல் வரும் கான்செப்ட் தான் உலகில் உள்ள பாதி பேரை அழிப்பது தான் இந்த கொரோனாவின் வேலை. அது இனிதே நடக்கும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூன்-202011:47:49 IST Report Abuse
Bhaskaran Palaaayiram makkalin manakumural ithu
Rate this:
Madhuvanthi Kumaran - Chennai,இந்தியா
28-ஜூன்-202010:28:00 IST Report Abuse
Madhuvanthi Kumaranhida......
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூன்-202009:06:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்லோராலும் அப்படி எல்லாம் பலகோடிகளுக்கு அதிபதி ஆவமுடியுமோ???/எவ்ளோபிராடுகளும் செய்தும் தான் மாட்டிக்காமலே 90+வயசுவரை வாழ்ந்து செத்தானுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X