பொது செய்தி

இந்தியா

டில்லி சுகாதார அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சை

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.



latest tamil news



டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அமைச்சருக்கு அளிக்கப்படும் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், அவருக்கு நுரையீரலில் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது சிடி ஸ்கேனில் தெரியவந்துள்ளது. அவருக்கு தொடர்ந்து மயக்கநிலை ஏற்படுகிறது . டாக்டர்கள் அறிவுரை பின்பற்றப்படும் என தெரிவித்தார். அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னர் அனில் பைஜால், உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு அதிகமானதால் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-202021:00:11 IST Report Abuse
Tamilan நாடு முழுவது கட்டுக்கடங்காமல் போக டில்லியும் ஒரு காரணம் ஆகிவிட்டது . அதற்க்கு காரணமானவர்களை தேர்தலில் ஓட்டுக்காக கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களுக்கு வேறு என்ன கிடைக்கும்?. அப்படிப்பட்ட அரசை டிஸ்மிஸ் செய்யமுடியாமல் போனது அரசியல் சட்டத்தின் கையாளாக தானங்களில் ஒன்று .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X