பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் பரந்து விரிந்து கால் பதித்திருக்கும் சீன வர்த்தகம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
China, Large Trade, India, Infrastructure, Hi-Tech, large trade footprint, Beijing embassy, Chinese firms, Chinese investments in India, Beijing embassy website, FDI Intelligence, Ola, Paytm, Zomato,  Flipkart, physical goods,  சீனா, இந்தியா, வர்த்தகம்

புதுடில்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோசமான எல்லை மோதல் வர்த்தக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதியில் இந்தியாவின் மூலம் சீனாவே அதிகம் பலனடைந்து வந்திருக்கிறது.

வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவிற்கான சீன தூதரக இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் படி இது 2019 ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்த இருதரப்பு வர்த்தகம் 84.3 பில்லியன் டாலருக்கு நடந்துள்ளதாக காட்டுகிறது. முந்தைய ஆண்டின் 95.7 பில்லியன் டாலர்களிலிருந்து இது கிட்டத்தட்ட 3.2% வீழ்ச்சி ஆகும்.


latest tamil news


சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. ஆனால் ஒரு பெரிய வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது. இந்தியா சீனாவிற்கு விற்பதை விட, சீனாவிடமிருந்து அதிக பொருட்களை வாங்குகிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்கு சராசரியாக 16% ஆகும். மறுபுறம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், சீனாவிற்கான பங்கு வெறும் 3.2% மட்டுமே. இந்த ஏற்றத்தாழ்வு இந்தியாவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் பங்குகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2019-20-ல், சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளதாக உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனமான எஃப்.டி.ஐ இன்டலிஜென்ஸின் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்சி சேவை வழங்கும் ஓலா, பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம், உணவு விநியோக செயலியான சோமாடோ மற்றும் ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் போன்ற நம் நாட்டின் தொழில்நுட்ப பிராண்டுகள் சிலவற்றில் சீன நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்துள்ளன. ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள மூன்றில் இரண்டு பங்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சீன முதலீடுகளை கொண்டிருக்கிறது.


latest tamil news


இந்தியா இங்கிருந்து பருத்தி, நூல், கரிம வேதிப்பொருட்கள், தாதுக்கள், இயற்கை முத்துக்கள், விலைமதிப்புமிக்க கற்கள், துணிகள் உள்ளிட்ட முதன்மை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனா அங்கிருந்து மின்சார இயந்திரங்கள், மின்னணு உபகரணங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், சூரிய ஆற்றல் சாதனங்கள் மற்றும் மருந்து துறைக்கு முதுகெலும்பாக விளங்கும் மூலப்பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது சீனாவுடனான நேரடி மோதலால் இறக்குமதியை படிப்படியாக குறைக்க முயற்சிப்பார்கள். இது இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூன்-202004:25:44 IST Report Abuse
தல புராணம் இந்தியாவில் பரந்து விரிந்து கால் பதித்திருக்கும் கொரோனாவை மறக்கடிக்க இந்த விளையாட்டு கொஞ்ச நாள் தான் உதவும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-202003:52:09 IST Report Abuse
J.V. Iyer இதை எப்படி அனுமதித்தார்கள்? நம்பமுடியவில்லை. இப்போதாவது தவறை திருத்திக்கொள்வார்கள் என்று நம்புவோம்.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
20-ஜூன்-202010:41:39 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுI think you never heard about globalization....
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-202001:41:11 IST Report Abuse
தமிழ்வேல் சீனாவால் எதெல்லாம் செய்ய முடிகின்றதோ அதெல்லாம் நம்மாலும் முடியும். ஆனால், அதற்கு நாம்தான் தயாராக இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X