லடாக் பிரச்னை: பிரதமர் முடிவுக்கு சர்வ கட்சி தலைவர்கள் ஆதரவு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: லடாக் பகுதியில் சீனாஉடனான எல்லைப்பிரச்னையில் பிரதமரின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அனைத்து கட்சி தலைவர்கள் கூறினார்.



latest tamil news



கடந்த சில மாதங்களாக இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் இந்தியா சீனா படைகளை குவித்து வந்தது. இதனிடேயே கடந்த 15 ம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியதரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பாதிப்பு குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை,


latest tamil news



இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விவாதம் நடதத் வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கட்சி தலைவர் சோனியா, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், மே.வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, தமிழகத்தில் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டதில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்அனைத்து தலைவர்களும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். மேலும் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா தலைவரும் மாநில முதல்வருமான பிரேம் சிங் தமாங் "பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. என கூறினார்.


லடாக் பிரச்னையில் பிரதமர் மோடியின் முடிவுக்கு தமிழகம் துணை நிற்கும் : தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.


திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் தேச பக்தி என்று வரும் போது நாங்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என கூறினார். முன்னதாக பிரதமரின் இந்தியா சீனா பிரச்னை தொடர்பான அறிக்கையை வரவேற்றுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
20-ஜூன்-202001:18:59 IST Report Abuse
Murthy இன்று நாட்டுக்காக பிரதமர் பின் நிற்போம்.
Rate this:
Cancel
Kalam - Salem,இந்தியா
19-ஜூன்-202020:17:49 IST Report Abuse
Kalam சீனா பொருட்களை மக்கள் வாங்க விரும்ப வில்லை . ஆனா நாட் மேட் இன் சீனா பொருட்களை வாங்க மக்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டி உள்ளது. இங்க ஓடிக்கிட்டுருந்த தூத்துக்குடி தொழிற்சாலை பொல்யுசன் அப்பிடின்னு புருடா விட்டு மூடிய சீனா கைக்கூலிகள் இன்னிக்கு நடிப்புல சிவாஜியை தோக்கடிக்கறானுகள். இப்ப தூத்துக்குடியில் காற்று சுத்தமா இருக்க? இந்த பேக்டரி மூட சீனா கிட்ட கூலி வேலை செய்தது யார் ?
Rate this:
Cancel
19-ஜூன்-202019:58:10 IST Report Abuse
நக்கல் தேசவிரோத கம்யூனிட்டுகள் இதில் சேர்க்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X