பொது செய்தி

இந்தியா

பிரயாக்ராஜ் ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

லக்னோ : உ.பி.,யில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில், விமான பயணிகளுக்கு வழங்குவது போன்று ரயில் பயணிகளுக்கும் போர்டிங் பாஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்க டிக்கெட் பரிசோதனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் வட மத்திய ரயில்வே அதிகாரிகள் போர்டிங் பாஸ் வசதியைஅறிமுகம் செய்தனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முதலில் 4 புதிய செக்-இன் கவுன்டர்களுடன் ஒரு போர்டிங் ஹாலுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த கவுன்டர்கள் முழுமையாக தொடர்பு கொள்ளாமல் உள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார்.


latest tamil news



பயணிகளின் அடையாள அட்டை மற்றும் டிக்கெட் ஆகியவை வெப்கேம்கள் மூலமாக பரிசோதனை செய்யப்படும். அதில் கணினியுடன் டிக்கெட் பரிசோதகரும் இருப்பார். பயணிகளுக்கும், டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகளுக்கும் இடையே தகவல்களை பரிமாற்றம் செய்ய மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை கவுன்டர்களில் தயாராக அமைக்கப்பட்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களைப் பாதுகாக்க தொடர்பு இல்லாத டிக்கெட் சரிபார்ப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு ரயிலில் காலியாக உள்ள பெட்டிகளை அடையாளம் காண உதவுகிறது, பின்னர் பயணிகளுக்கு பெட்டிகளை பெறுவதற்கு அடுத்த நிலையத்திற்கு ரிலே செய்யப்படுகிறது.


latest tamil news



ரயில் நிலையத்தில் பயணிகள் நுழையும் முன், தெர்மல் ஸ்கேனிங் மூலம் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றவும் , பயணிகளை கையாள்வது தொடர்பாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 1 முதல் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான டிககெட் க்யூ ஆர் கோடு மூலமாக சோதனை செய்யப்படுகிறது. மே 12 முதல் 30 ஏசி சிறப்பு ரயில்களும், ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 26 ஏ.சி சிறப்பு ரயில்கள் மற்றும் 100 சிறப்பு ரயில்கள் என்சிஆர் வழியாக வெவ்வேறு ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பிரயாக்ராஜ்-டில்லி மற்றும் கான்பூர்-டில்லி இடையே சிறப்பு ரயில்களும் அடங்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X