ஜெர்மனியில் 100 பேரிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை| Germany's CureVac starts human trials for Covid-19 vaccine | Dinamalar

ஜெர்மனியில் 100 பேரிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (2)
Share

பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா பாதித்தவர்கள் 100 பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படுகிறது.

அந்நாட்டின் மருந்து நிறுவனமான கியூர்வாக் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை மனிதர்களிடம் துவக்கி உள்ளது. டுபின்ஜன் பல்கலையில் நடக்கும் இந்த சோதனையில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 பேரிடம் தடுப்பூசி ஆய்வு நடக்கிறது.



latest tamil news



சோதனையின் முடிவுகள் இரண்டு மாதங்கள் ஆகும் என ஜெர்மனி செய்தி நிறுவனம் ஃபோகஸ் ஆன்லைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு மருத்துவ விஞ்ஞானி பீட்டர் கிரெம்ஸ்னர் கூறுகையில், ' மனிதர்களிடம் நடத்தப்படும் இந்த தடுப்பூசி பரிசோதனையில் அதை மனித உடல் ஏற்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்வினை உள்ளிட்டவை உன்னிப்பாக ஆய்வு செய்யப்படும்' இவ்வாறு கூறினார்.


latest tamil news



இம்மருந்து நிறுவனத்தின் சுமார் ரூ 2500 கோடி அளவிலான பங்குகளை வாங்குவதற்காக ஜெர்மன் அரசு இரு தினங்களுக்கு முன் அறிவித்தது. இதுவரை ஜெர்மனியில் 1,90,264 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 8,952 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 1,74,100 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X