பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு; மேலும் 14 பேர் பாதிப்பு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: கோவையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வருகிறது. ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த மேலும் ஏழு பேர் உள்பட மொத்தம் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கோவையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் குடியிருப்பு பகுதியான, ஆர்.ஜி.புதுாரில் ஏற்கனவே 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் ஏழு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோக, பீளமேடு, லால்பகதுார் காலனியை சேர்ந்த 98 வயது மூதாட்டி, ராஜா வீதியை சேர்ந்த 45 வயது ஆண் என, இருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில மாதங்களா வெளியூர்களுக்கு செல்லாமல் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீத்திபாளையம், சிறுமுகை, காரமடை, புங்கம்பாளையம், சொக்கன்புதுார் ரோடு ஆகிய புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


latest tamil news




பாதிக்கப்பட்ட 14 பேரும் கோவை இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கோவையில் பாதிப்பு எண்ணிக்கை, 244 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.



காத்திருக்கும் 170 பேர்!


வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே மாதரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நாடு திரும்பி வருகின்றனர். அந்தவகையில், இலங்கையில் இருந்து, 170 இந்தியர்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை, ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுள்ளதால், இந்த விமானம் கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கோவையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 'வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு பயந்து சுகாதாரத்துறையினரை ஏமாற்றி நேராக வீடுகளுக்கு சென்றவிட்டதே இந்த நிலைமைக்கு காரணம்' என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 'இதே நிலை நீடித்தால் சென்னை போல் கோவையும் கொரோனா மையமாக மாறக்கூடும்' என, மக்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202023:12:14 IST Report Abuse
தல புராணம் //வந்தே மாதரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நாடு திரும்பி வருகின்றனர். // அது "வந்தே பாரத்" திட்டம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202023:10:26 IST Report Abuse
தல புராணம் // 'வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு பயந்து சுகாதாரத்துறையினரை ஏமாற்றி நேராக வீடுகளுக்கு சென்றவிட்டதே இந்த நிலைமைக்கு காரணம்' என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.// கையில் சப்பு சப்புன்னு ரெண்டு ரப்பர் ஸ்டாம்ப் குத்துறதை தவிர ஒரு ... சுகாதாரத்துறையினர் செய்யிறதில்லை. எதுக்கு குத்துகிறார்கள், என்ன செய்ய வேண்டும், என்ற ஒரு விவரமும் தரப்படுவதில்லை, தகவல் பெறப்படுவதில்லை. தூரத்தில் இருந்து இரண்டு பேர் "கிளிக் கிளிக்" என்று போவோரை மொபைல் போனில் போட்டோ எடுக்கிறார்கள். ஏன் அனைவரையும் எமிகிரேஷன், மற்றும் சுங்க சோதனை செய்யும் போது நிறுத்தி விவரங்களை வாங்கவில்லை? ஏர் இந்தியாவிடம் கேட்டால் பிரயாணிகள் லிஸ்ட்டை பெறமுடியும், வேண்டிய எல்லா தகவல்களும் அங்கே இருக்குமே. எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் சும்மா வெட்டியாக வந்து வீணுக்கு வேலை செய்து விட்டு பயணிகளை குற்றம் சொல்லாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X