பொது செய்தி

தமிழ்நாடு

வீரதீர செயலுக்கு 5 போலீசாருக்கு ரூ.5 லட்சத்துடன் விருது

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வீரதீர செயல்,  5 போலீசார், ரூ.5 லட்சம், விருது

சென்னை சிறப்பு எஸ்.ஐ., வில்சனை, சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை கைது செய்த, உளவுத்துறை, டி.ஐ.ஜி., கண்ணன், 'கியூ'பிரிவு, எஸ்.பி., மகேஷ் உள்ளிட்ட, ஐந்து போலீஸ் அதிகாரிகளுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், முதல்வர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர், வில்சன், 57. இவர், ஜனவரி, 8 இரவு, அங்குள்ள சோதனை சாவடியில், பணியில் இருந்தபோது, மர்ம நபர்களால், துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொல்லப்பட்டார்.


latest tamil news




இதுகுறித்து வில்சன் கொலை வழக்கில், சிறப்பாக துப்பு துலக்கி, பயங்கரவாதிகளை கைது செய்த, டி.ஐ.ஜி., கண்ணன், 'கியூ' பிரிவு எஸ்.பி., மகேஷ், உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்.பி., அரவிந்த், கோவை உளவுத்துறை சிறப்பு பிரிவு, டி.எஸ்.பி., பண்டரிநாதன், சென்னை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், தாமோதரன் ஆகிய ஐந்து பேருக்கும், வீர தீர செயலுக்கான முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது, தலா, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு உடையது.
இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் பிரபாகர், முன் தினம் வெளியிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnaraj - bangalore,இந்தியா
19-ஜூன்-202023:49:26 IST Report Abuse
krishnaraj Rulers MUST ABOLISH All WASTEFUL & EXTRAVAGANT EXPENDITURES Incl. FREEBY-BRIBERIES (Only 10% are Poordebilitated-aged etc Others are Earning & with Money), ALL GOVT. POSTS (with VVV FAT PAY-Scales Useless, Anti-People, Power Misusing Esp. Rulers-Officials Incl. Police-Judges), all Upperhouses Etc Etc Etc., With SAVED MONEY, ENSURE 01 JOB PER FAMILY With Only applicable Minm Wages For ALL in All Spheres (Incl. Power Misusing Dictator Rulers-Officials-Injustice Judges as They Encourage It Against Laws), FOOD-MEDICAL-ECONOMIC-SOCIAL (Basic Human Rights) SECURITY. Since People-Rep Rulers Will Not Do so, Every Year Elections Must so that Reps Will Fear & Work for Supreme People
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X