மஹா.,வில் கொரோனா பாதிப்பு 1.20 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து புதிதாக 3752 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.20 லட்சத்தை தாண்டியதாக அம்மாநிலத்தின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3752 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,20,504 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று கொரோனா தாக்கம் காரணமாக 100 பேர் பலியானது அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுவரை மாநிலத்தில் நோய் பாதிப்புக்கு 5,751 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 99 பேர் மும்பை நகரத்தையும், மற்றொருவர் நாக்பூரையும் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.


latest tamil news



இதற்கு முன்னதாக ஜூன் 11 ல் ஒரே நாளில் அதிகபட்சமாக 3,607 பேர் பாதிக்கப்பட்டனர். ஜூன் 16 அன்று வாராந்திர சராசரி வளர்ச்சி விகிதம் 3% ஆகவும், மே 31 அன்று 4% ஆகவும், ஏப்ரல் 30 அன்று 7% க்கும் குறைவாகவும் இருந்தது. மாநிலத்தில் 53,901 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று வரை மஹா.,வின் இறப்பு விகிதம் 4.77 சதவீதமாக இருக்கிறது. மும்பையில் மட்டும் புதிதாக 1,288 பேர் பாதிக்கப்பட்டனர். மும்பையில் மொத்தமாக 62,875 பேர் பாதிக்கப்பட்டனர். 67 புதிய பலிகளுடன் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,311 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
20-ஜூன்-202004:33:25 IST Report Abuse
jay Aபத்தம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X