கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தும் வார்டுகளாக 5231 ரயில் பெட்டிகள் மாற்றம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையளிக்கும் திறனை மேம்படுத்த ஏ.சி அல்லாத 5231 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்த ரயில்வே முடிவுசெய்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. தலைநகர் டில்லியிலும் (குறிப்பாக எல்லை மாவட்டங்களில்) கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரதுறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நோய் பாதிப்புகளை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து 5,231 ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது. அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநிலங்களில் உள்ள படுக்கை வசதிகள் நிறைந்த பின் இந்த ரயில்களில் நோயாளிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை துவங்கும்.


latest tamil news



டில்லியில் கொரோனா அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி விட்டதால் பல நட்சத்திர ஓட்டல்களும் விடுதிகளும் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, ரயில்பெட்டிகளில் தனிமைப்படுத்த டில்லிக்கு ரயில்பெட்டிகளை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி, டில்லிக்கு ரயில்களை ரயில்வே துறை அனுப்பியது. இந்த ரயில்களில் காற்றோட்டமுடன் , இயற்கை வெளிச்சத்துடன் பயன்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கான ரயில்கள் என்பதால் ஏ.சி குறித்து நிதி நியாக் மற்றும் மத்திய சுகாதாரதுறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.


latest tamil news



ஏ.சி காற்று குழாய்கள் மூலமாகவும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏ.சி பெட்டிகள் பொருத்தமாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது. மிதமான, அதிக மிதமான மற்றும் நோய் தொற்று அறிகுறிகள் கொண்ட சந்தேசிக்கப்படும் நோயாளிகள் தனிமைப்படுத்த இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படும். அரசு விதிமுறைகளின்படி, ரயில் நிற்கும் பிளாட்பாரத்தின் அருகில் அவசரசிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும். பொருட்களை மாற்றம் செய்வதற்கான அறைவசதி களும் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
20-ஜூன்-202001:25:31 IST Report Abuse
Murthy கோடையில் இந்த பெட்டியினுள் இருப்பது மிகவும் கஷ்டம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜூன்-202022:19:38 IST Report Abuse
S. Narayanan ஆக ஜூலை மாதத்திலும் ரயில் ஓடுவது சாத்தியமில்லை.
Rate this:
Cancel
19-ஜூன்-202021:07:34 IST Report Abuse
rasheed குழந்தை விடுமுறை முடிஞ்சா. ரயில் மூலம். உல்லாச. பயணம் போவேன். அதை மறக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X