பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பார்சல் மட்டுமே: ஓட்டல் சங்கம் முடிவு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் வரும் 30 ம் தேதி வரையில் பார்சல் மட்டுமே வழங்குவது என ஓட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 30 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாடுமுழுவதும் உள்ள 5-ம் கட்ட ஊரடங்கில் ஓட்டல்களில் உணவருந்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்திருந்தது.இருப்பினும் சென்னையில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.


latest tamil news



இந்நிலையில் ஓட்டல் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் ஓட்டல்களில் பார்சல் வழங்கப்பட்டு வந்தது. மற்ற மாவட்டங்களில் உணவருந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒட்டல் ஊழியர்களின் நலன் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வரும் 30 ம் தேதி வரையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-202006:36:03 IST Report Abuse
ஆப்பு இனிமே ஓட்டலில் போய் சாப்புடுன்னு ரவுண்டு கட்டி அடுச்சாலும் யாரும் போகமாட்டான்.
Rate this:
Cancel
19-ஜூன்-202021:40:07 IST Report Abuse
rasheed நல்ல முடிவு
Rate this:
Cancel
19-ஜூன்-202021:32:24 IST Report Abuse
அம்பிகாபதி     மதுரை நல்ல முடிவு ஹோட்டல் நிர்வாக செலவு குறையும் ஹோட்டல் பணியாளர்கள் வேலையில் வைத்திருக்க வேண்டாம் கரண்ட் பில் செலவு குறையும் தண்ணீர் செலவு குறையும் வாடகை building என்றால் அதை காலி செய்து சிறிய ரூம் வாடகைக்கு பார்க்கலாம் பார்சல் மட்டும் தானே வாடகை செலவு மிச்சம் இதை கொரோனவிற்காக இல்லாமல் எப்போதும் பார்சல் மட்டும் வைத்து கொண்டால் செலவும் குறையும் லாபமும் கிடைக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X