நாட்டின் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை : மோடி

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

புதுடில்லி:நாட்டின் எல்லைக்குள் சீனா நுழையவில்லை என பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தில் கூறினார்.



latest tamil news


லடாக் பகுதியல் இந்தியா சீனா இடையேயான பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி இன்று 19 ம்தேதி )அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதன்படி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.

சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைககளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.



latest tamil news


கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதே போன்று நமது ஆயுதப்படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், அதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
20-ஜூன்-202015:40:43 IST Report Abuse
s.rajagopalan மோடி வெறுப்பை கொட்டுங்கள் ...அதற்காக சீனர்களை வீரர்களாக்கி, ராணுவத்தினரை அநியாயமாக கொச்சை படுத்தாதீர்கள். நம் ராணுவம் திருப்பி அடிக்கும் ...அப்போது முகத்தை மூடிக்கொள்ள ஒரு பெரிய துணியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்
Rate this:
Cancel
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-202001:33:05 IST Report Abuse
Bismi சீனன் ஒரு ஈனன்
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
20-ஜூன்-202000:29:53 IST Report Abuse
Vetri Vel இந்திய நிலப்பரப்பு நழுவி சீனா காரன் காலடியில் போயிடிச்சு... சீன போடுறாரு பாரு.. உண்மை கிலோ என்ன விலை...? இன்னுயிர் நீர்த்த இந்திய குடிமகன்களுக்கு ஒரு அவமதிப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X