கொரோனாவில் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் குறைப்பு| Centre revises quarantine period to 1 week for doctors, health workers | Dinamalar

கொரோனாவில் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தனிமைப்படுத்தும் நாட்கள் குறைப்பு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020
Share

புதுடில்லி : கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் தனிமைப்படுத்தம் நாட்களை 7 நாட்களாக குறைத்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. கொரோனா தொற்று குறித்து யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என அரசு அறிவித்து அதனை செயல்படுத்தியது. தற்போது, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையை சேர்ந்த சுகாதாரதுறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பலரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 7 நாட்களாக குறைத்துள்ளது.


latest tamil news



அவ்வாறு குறைக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் தனிமைப்படுத்தும் காலத்தை நீட்டிக்கும் முடிவை அந்தத் துறை அதிகாரி அல்லது தலைமை அதிகாரி எடுக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து சுகாதாரதுறை பணியாளர்களுக்கும் பொருந்தும். அவ்வாறு தனிமைப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலை மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையிலும், வேறு ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டால், ஐசிஎம்ஆர் விதிமுறை களின்படி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அறிகுறிகளுக்கு ஏற்ப வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்துதலில் அவசியம் இருக்க வேண்டும். இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X