சிங்கப்பூரில் இன்று மேலும் 142 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இன்று புதிதாக 142 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிங்கப்பூரிலும் நோய் பாதிப்புகள் அதிகமாகி வருவதால் நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இன்று சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து புதிதாக 142 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 41,615 ஆக அதிகரித்தது.


latest tamil news



பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்தது. நாட்டில் இதுவரை 26 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். மேலும் 32,712 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X