பொது செய்தி

இந்தியா

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்: பாக்., புறக்கணிப்பு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

ஜெய்பூர்: வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியாவுடன் நடத்த இருந்த ஆலோசனை கூட்டத்தை பாக்., புறக்கணித்துள்ளது

இந்தியாவின் வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாய நிலஙகளில் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இந்தியாவைப் போலவே பாக்., கிலும் வெட்டுக்கிளிகள் அதிக அளவு சேதத்தினை ஏற்படுத்தி வருகின்றன.



latest tamil news



இது குறித்து கூட்டாக ஆலோசனை செய்ய இந்தியாவும், பாக்., கும் முடிவு செய்திருந்தன. இரு நாடுகளுக்கு இடையே ராஜஸ்தான் மாநிலம்ம முனாபோ பகுதியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. கடைசி நேரத்தில் அதில் பங்கேற்காமல் பாக்., புறக்கணித்து விட்டது.


latest tamil news



டில்லியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய போது இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார். பாக்., ஏன் ஆலோசனை கூட்டத்தினை புறக்கணித்தது என்பது குறித்து தகவல் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
20-ஜூன்-202009:22:07 IST Report Abuse
நிலா சீனா கொரோனா வைரஸ் பாகிஸ்தான் வெட்டுக்கிளியை அனுப்பி இந்தியாவை அழிக்கப் பார்க்கிறது அட போங்க பா எங்களுக்கு இதுவெல்லாம் ஜீஜிப்பி
Rate this:
Cancel
20-ஜூன்-202008:12:00 IST Report Abuse
ஆப்பு வெட்டுக்கிளி தீவிரவாதம்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
19-ஜூன்-202022:28:35 IST Report Abuse
அன்பு வெட்டுக்கிளி பிரச்னையை பாகிஸ்தான் ஒரு முன்னோடி நாடாக கையாண்டது. வெட்டுக்கிளியை வலையால் பிடித்து தருபவர்களுக்கு ஒரு கிலோவிற்கு இவ்வளவு என்று அரசு பணம் தந்தது. அந்த வெட்டுக்கிளியை கோழி பண்ணையில் உணவாக கொடுத்தது. இதன் மூலம் கோழிக்கு தரமான ப்ரோடீன் உணவு கிடைத்தது. அதன் வழிமுறையை இந்தியாவிற்கு சொல்ல கூடாது என்பதற்காக தான், பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தையை புறக்கணித்து உள்ளது. எதிரியாக இருந்தாலும், அதன் வழிமுறைகளை இந்தியா பின்பற்ற தயங்க கூடாது. முன்பே இந்த சந்திப்பை செய்திருக்க வேண்டிய இந்தியா, இவ்வளவு நாள் ஈகோ கருதி தள்ளிபோட்டது. இப்போது சந்திப்பை புறக்கணித்து பாகிஸ்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறது. எப்போது இந்த இருநாடுகளும் மனதளவில் பெரியவர்களாக வளரும் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X