பொது செய்தி

இந்தியா

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: உள்நாட்டு தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.கொரோனா சிகிச்சைக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து உலக நாடுகள் பலவும் இந்தியாவிடம் ஏற்றுமதி செய்ய வலியுறுத்தின. இந்தியாவின் தேவைக்காக அதனை ஏற்றுமதி செய்ய
Govt, lifts, export ban, hydroxychloroquine, central government, govt of india, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona drug, anti-malarial drug, export ban, india

புதுடில்லி: உள்நாட்டு தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து உலக நாடுகள் பலவும் இந்தியாவிடம் ஏற்றுமதி செய்ய வலியுறுத்தின. இந்தியாவின் தேவைக்காக அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. உலக நாடுகள் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. இதற்காக உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில், உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு, உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நாட்டில் தற்போது, 200 மி.கி., திறன் கொண்ட 30.66 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள், உள்நாட்டு சந்தை தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-202006:32:10 IST Report Abuse
ஆப்பு ட்ரம்பால நமக்கு நல்ல லாபம். சும்மா மிரட்டில்ல வாங்குனாரு. சரி, பேமெண்ட் கிடைச்சுதா?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202022:57:51 IST Report Abuse
மதுரை விருமாண்டி பயனற்ற இந்த வீணான வாங்குறதுக்கு எவனும் இல்லை. இதை "பிரபலப்படுத்தி" பங்கு சந்தையில் காசு பாத்தவனும், மாத்திரையை வீணாக வாங்கி வைத்த நமது அரசாங்கமும் பாக்க வேண்டிய பணத்தை பார்த்தாகி விட்டது. இனிமேல் IPCA Labs பங்கை ஷார்ட் (short) செய்து bear market இல் காசு பார்ப்பார்கள். மெடலு குத்திக்கிட்டாச்சு.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜூன்-202022:48:37 IST Report Abuse
S. Narayanan இந்தியா விரைவில் உலகுக்கே முன்னோடியாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X