சீன பொருட்களுக்கு நாடெங்கும் கிளம்புது எதிர்ப்பு!

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
சீன பொருட்கள், நாடெங்கும் கிளம்புது  எதிர்ப்பு! India, China, border dispute, ban, boycott, Chinese products, Made in India

சென்னை : சீன தயாரிப்பு பொருட்களுக்கு, நாடு முழுவதும், பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'இந்தியாவில் தயாரிப்போம்; இந்திய பொருட்களையே வாங்குவோம்' என்ற, தன்னிறைவு புரட்சி, சத்தமில்லாமல் துவங்கியுள்ளது.

நம் நாட்டு ராணுவ வீரர்கள் மீது, சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, சீன பொருட்களை புறக்கணிக்கும்படி, சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு, பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.சீனாவில் இருந்து, வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள், உணவு பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள், இயந்திரங்கள் என, பல வகையான பொருட்கள், நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்கப்படுகின்றன.


கோரிக்கைஅவை, தரமற்று இருந்தாலும், குறைந்த விலைக்கு கிடைப்பதால், மக்கள் வாங்குகின்றனர். இதனால், நம் நாட்டில், அந்த பொருட்களை உற்பத்தி செய்யும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.சீன தயாரிப்புகளை தவிர்க்குமாறு, உள்ளூர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும், பலர் ஏற்கவில்லை. இதனால், பெட்டிக்கடை முதல், பிரம்மாண்ட கடைகள் வரை, சீன பொருட்கள் ஆக்கிரமித்துள்ளன.இந்நிலையில், நம் நாட்டின் எல்லை பகுதியில், சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து, நம் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; அதில், 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இது, நாட்டு மக்களிடம், சீனாவின் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சீன பொருட்களை புறக்கணிக்குமாறு, பலரும் சமூக வலைதளங்களில், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஊரடங்கை தொடர்ந்து தற்போது, சீனா மற்றும் சீன பொருட்களுக்கு எதிரான, 'மீம்ஸ்'களும், எதிர்ப்புகளும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில், 'இ -- காமர்ஸ்' என்ற, இணையதள பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என, இணையதள பக்கத்தில் காட்சிப்படுத்துவது, கட்டாயமாக்கப்பட உள்ளது.

இது தொடர்பான பிரிவு, இ - காமர்ஸ் கொள்கையில் இடம்பெற உள்ளது. இதற்கான மசோதாவை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை தயாரித்து வருகிறது.
இதன்படி, இ - காமர்ஸ் நிறுவனங்கள், விற்பனை செய்யும் பொருட்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையா; இல்லையா என்பது குறித்து, அவர்களது விற்பனை தளத்தில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். அவ்வாறு காட்சிப்படுத்தும் போது, சீனா பொருட்கள் வாங்குவது தடைபடும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் அதையே வாங்க விரும்புவர். இந்த கொள்கை தொடர்பாக, பொது மக்கள் கருத்து தெரிவிக்க ஏதுவாக, விரைவில், பொது தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மேலும், தவறான தகவலை பரப்புவோரை தண்டிக்கும் அதிகாரமும், இந்த கொள்கையில் இடம்பெற உள்ளது. கிராமப்புற உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் போன்றவற்றை ஊக்குவிப்பதே, இந்த இ - காமர்ஸ் கொள்கையின் நோக்கமாக உள்ளது.தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துதல் துறை, 2019ல், தேசிய இ - காமர்ஸ் கொள்கை மசோதாவை வெளியிட்டது.


விபரங்கள்தில், 'இ - காமர்ஸ் நிறுவனங்கள், விற்பனை செய்யும் பொருட்களின் விபரங்களையும், அவர்களது தொடர்பு எண்களையும் வெளியிட வேண்டும். மேலும், அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் தரமானவை எனவும், வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக் கூடியவையாகவும் இருக்கும் எனவும், உறுதி அளித்திருக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
சீன பொருட்களை அதிகம் வாங்குவதால், சீனாவின் வர்த்தகம், 2019 -- 20ம் நிதியாண்டின், முதல், 11 மாதத்தில், இந்தியாவை விட, 3.57 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக உள்ளது.இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை வாங்கினால், இந்தியாவின் வர்த்தகம், சீனாவை விட பல மடங்கு அதிகரிக்கும். அதற்கான துவக்கமாக, சீன பொருட்களுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தன்னிறைவு புரட்சி, சத்தமில்லாமல் துவங்கியுள்ளது.


வணிகர்கள் சூளுரை!


'

தேச நலன் கருதியும், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், சீனா பொருட்களை வாங்கி விற்பதை, வணிகர்கள் தவிர்க்க வேண்டும். இந்தியனாக இருப்போம்; இந்திய பொருட்களையே சந்தைப்படுத்துவோம் என சூளுரைத்து, சீனப் பொருட்களை புறக்கணிப்போம்' என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
23-ஜூன்-202012:21:27 IST Report Abuse
Tamilnesan அதானி குழுமம் சென்ற வாரம் நடந்த சண்டைக்கு பிறகு சீனாவிலிருந்து பொருட்களை வாங்கவில்லை. அப்படி பார்த்தால் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இது நடந்துள்ளது, தற்போதும் தொடர்கிறது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூன்-202011:37:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்றுமே எங்கள் வீட்டுலே அந்தக் காலத்துலேந்து சீனப்பொருட்கள் வாங்கறதில்லீங்க 1942லேந்து நான் சின்னவளா இருக்கும்போதுகூட என் பாட்டி சீனவெடிகள் தான் பிரபலம் (1940ஸ்லே)தீவளிக்கு ஒரு சீனிவெடியும் வாங்கவிடமாட்டார் எனகாமு அந்த வழக்கம் இருக்கு எப்போது கைத்தறி உடைகளேதான் உடுத்துவேன் நோ டு நைலெக்ஸ் புடை வங்கள் ஒன்னும்குறைஞ்சுப்போகலேயே நன்னாவே இருக்கேன் எல்லோரும் நம்ம ஊறின் சீதோஷ்ணத்துக்கு ஏற்ற உடைகளேதான் போடணும் கதர் அண்ட் கைத்தறிகளேபோதும்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-ஜூன்-202013:57:23 IST Report Abuse
Rafi மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, பிரதமர் சீனாவின் மீது பொருளாதார தடை, மற்றும் சீன பொருள்களுக்கு இறக்குமதிக்கும், தடை விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X