பிரதமர் கூட்டத்துக்கு அழைப்பு இல்லை: கெஜ்ரிவால், லாலு கட்சிகள் அதிருப்தி

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததை முன்வைத்து, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், மஜ்லிஸ் முஸ்லிம் கட்சிகள், கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பட்டிருந்தன.அனுமதி தர
Congress president Sonia Gandhi, sonia gandhi, pm modi, modi news, prime minister narendra modi, India-China clash, Lalu Yadav, Arvind Kejriwal

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததை முன்வைத்து, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், மஜ்லிஸ் முஸ்லிம் கட்சிகள், கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பட்டிருந்தன.


அனுமதி தர மறுக்கிறது
latest tamil news
ஆனால், இந்த அழைப்பில், தேசிய அரசியலிலும், பார்லிமென்டிலும் முக்கிய கட்சிகளாக கருதப்படும் ஆம்ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், முஸ்லிம் மஜ்லி கட்சிகளுக்கு, அழைப்பு அனுப்பப்படவில்லை.இதுகுறித்து, ஆம்ஆத்மி எம்.பி.,யான சஞ்சய் சிங் கூறுகையில், ''டில்லியில் ஆளும் கட்சி; பஞ்சாபில் எதிர்க்கட்சி; பார்லி.,யில், நான்கு எம்.பி.,க்கள் உள்ளனர். ''இருந்தும், ஆம் ஆத்மிக்கு அழைப்பில்லை. முக்கிய விவகாரங்களில், ஆம் ஆத்மியின் கருத்தை பதிவு செய்ய, பா.ஜ., தொடர்ச்சியாக அனுமதி தர மறுக்கிறது,'' என்றார்.ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி., சஞ்சய் ஜா, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில், 'பீஹாரில், நாங்கள் பிரதான எதிர்க்கட்சி. பிரச்னைக்குரிய நேபாள எல்லையும், எங்களுக்கு அருகில் தான் உள்ளது.
'இருந்தும், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, எங்களுக்கு அழைப்பு இல்லை. இதுபோன்ற விஷயங்களில், எம்.பி.,க்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்வதை தவிருங்கள்' என, குறிப்பிட்டுஉள்ளார்.


கேள்விமஜ்லிஸ் முஸ்லிம் கட்சி எம்.பி.,யான அசாவுதீன் ஒவைசி கூறுகையில், ''சீனா குறித்த விவகாரத்தில், தொடர்ச்சியாக கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன் நான். ஆனாலும் அழைப்பில்லை. ''எதிர்க்கட்சிகளின் குரல்களை, காது கொடுத்து கேட்க வேண்டுமென்ற அக்கறை, மத்திய அரசுக்கு இல்லை,'' என்றார்.

லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும், குறைந்தது, தலா, ஐந்து எம்.பி.,க்கள் இருக்கும் கட்சிகளுக்கு மட்டும் அழைப்புகள் அனுப்பப்பட்டதால் தான், இக்கட்சிகள் விடுபட்டதாக கூறப்படுகிறது.அதேசமயம், சொற்ப எம்.பி.,க்கள் மட்டுமே உள்ள தெலுங்குதேசம், அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது எப்படி என்ற கேள்விகளும் கிளம்பியுள்ளன.இதனால், அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, எந்த அடிப்படையில், கட்சிகள் தேர்வு செய்யப்பட்டன என்பது குறித்த விவகாரம், விரைவில் வெடிக்கலாம் என, கூறப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-ஜூன்-202017:29:21 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்ல ஆலோசனை கருத்துக்களை கூறுபவராக அவர்மனதிற்கு தோன்றாத தாலோ அவரின் நல்ல செயலுக்கு முட்டு கட்டை போடும் சுபாவம் உடையவர்களானதால் அழைக்கவில்லை என கொள்ளலாம் நல்லவர்களுக்கு எங்கும் வரவேற்புண்டு ...
Rate this:
Cancel
Thiyaga Rajan - erode,இந்தியா
20-ஜூன்-202013:57:45 IST Report Abuse
Thiyaga Rajan 5 எம் பி க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் அழைப்பு.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூன்-202017:47:42 IST Report Abuse
madhavan rajanWhether TDP is so many MPs?...
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
20-ஜூன்-202013:12:30 IST Report Abuse
ayyo paavam naan எல்லா கட்சிக்காரர்களை கூப்பிடவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கு. நாட்டில் எத்தனை கலர் இருக்கோ அதனை கலரிலும் கட்சிக்கொடிகளுடன் கட்சிகள் இருக்கின்றன. எல்லோரையும் கூப்பிடவேண்டும் என்றால் அது இவர்கள் (கலர்கொடி கட்சிகள்) நடத்தும் மாநாடு அல்ல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை விவாதிக்கும் கூட்டம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், குற்றத்திற்கான தண்டனை பெற்று காவலில் இருப்பவர்களையும் அழைக்க வேண்டிய அவசியம் எந்த அரசுக்கும் இல்லை/ இருக்கவும் கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X