கொரோனா பரவலில் புதிய, அபாயகரமான கட்டத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு| WHO warns world in 'new and dangerous phase' of pandemic | Dinamalar

கொரோனா பரவலில் புதிய, அபாயகரமான கட்டத்தில் உள்ளோம்: உலக சுகாதார அமைப்பு

Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (18)
Share
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா மிக அதி தீவிரமாக பரவுகிறது என்றும் நாம் புதிய மற்றும் அபாயகரமான ஒரு கட்டத்தில் உள்ளோம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது: அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. நாம்


ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா மிக அதி தீவிரமாக பரவுகிறது என்றும் நாம் புதிய மற்றும் அபாயகரமான ஒரு கட்டத்தில் உள்ளோம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.latest tamil news
கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது: அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. நாம் தற்போது புதியதும் அபாயகரமானதுமான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


latest tamil news
கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது. இவ்வாறு டெட்ரோஸ் அதனோம் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X