பொது செய்தி

தமிழ்நாடு

வாட்டி வதைக்கும் வெயில் இரு நாட்களுக்கு நீடிக்கும்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'கடலுார் உள்பட, ஆறு மாவட்டங்களில், இரு நாட்களுக்கு, 40 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெயில் கொளுத்தும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



latest tamil news




அம்மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில், மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இன்றும், நாளையும், ஆறு மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகும்.


latest tamil news




சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இருக்கும்; புதுச்சேரியில், 40 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும்.தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு அரபி கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூன்-202004:21:31 IST Report Abuse
தல புராணம் June 21, அன்று சூரியகிரகணம் மட்டுமில்லை அன்று கோடை சங்கராந்தி. (Summer Solstice), அதிக நீளமான நாள் அது சூரிய உதயத்துக்கும், அஸ்தமனத்துக்கும் அதிகமான நேர இடைவெளி இன்று தான் இருக்கும். பூ மத்திய ரேகையை ஒட்டியிருக்கும் இந்தியாவில் இது அவ்வளவாக தெரியாது. சரியாக 12 மணிநேரம் இருக்கும். சற்று தள்ளியிருக்கும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 13 மணிநேரம், அதிகம் தள்ளியிருக்கும் டில்லியில் 14 மணிநேரம் பகலாக இருக்கும். அதனால் தான் கொடுமையான வெயிலாக தோன்றும். இது பூமத்தியரேகையை விட்டு தூரத்தில் இருக்கும் நாடுகளில் தெளிவாக தெரியும். உதாரணமாக கனடாவின் டொரோண்டோவில் 21 ம் தேதியன்று சூரிய உதயம், 05:32 am அஸ்தமனம் 09:02 pm, மொத்த நேரம் 15 மணிநேரம் 32 நிமிடம். வேன்கூவரில் 16 மணி 15 நிமிடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X