பொது செய்தி

இந்தியா

வீரர்களின் தியாகத்தை வீணாக விடமாட்டோம்: விமானப்படை தளபதி

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐதராபாத்: வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் என இந்திய விமானப்படை தளபதி கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார்.இந்திய - சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுதை அடுத்து இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா காஷ்மீரின் லே
IAF Chief, Bhadauria, Galwan Valley clash, Chinese army, ladakh clash, border dispute, Galwan, indian army, விமானப்படை, தளபதி, தியாகம், பதாரியா

ஐதராபாத்: வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் என இந்திய விமானப்படை தளபதி கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார்.

இந்திய - சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுதை அடுத்து இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு ரகசியமாக வந்து ஆய்வு நடத்திய தகவல் வெளியானது.


latest tamil news


இந்நிலையில், ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளது.
எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளது. கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.


latest tamil news


நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும், உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்னை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
20-ஜூன்-202021:20:45 IST Report Abuse
siriyaar அய்யா உங்க குடும்பத்தை பாருங்க
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூன்-202016:57:05 IST Report Abuse
Baskar இதிலிருந்தே தெரிகிறதா இந்த சாகிர் ஹுசைன் என்பவன் பாகிஸ்தான் கைக்கூலி என்று. இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம்கள் உள்ளனர் அதில் பாதிபேர் உளவாளிகள் தான். எவ்வளவு முஸ்லிம்கள் நல்ல உள்ளட்டதோடு இந்தியாவை காக்க காத்து இருக்கின்றனர் என்பது எதனை பேருக்கு தெரியும். இவற்கை திருந்த மாட்டார்கள். காசுக்குக்காக எதையும் செய்ய கூடியவர்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
20-ஜூன்-202016:15:38 IST Report Abuse
V Gopalan First of all, the traitors within the country should be shunted out to Pakistan, China and Nepal then comes to fighting with China. At any cost, our countrymen should teach a befitting reply at least the Akshai chin must be recovered from China. First the traitors and go on asking question after question, tweets must be punished. When the countrymen is fully saddened death of our Great Warriors and Four personnel are injured, these traitors are worst than Chinese. Jai Hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X