பிரசார பேரணியை குலைக்க முற்படுவோருக்கு டிரம்ப் எச்சரிக்கை| 'Won't be treated like in New York': Trump warns protesters in Oklahoma | Dinamalar

பிரசார பேரணியை குலைக்க முற்படுவோருக்கு டிரம்ப் எச்சரிக்கை

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020
Share
Trump, Warns, Protesters, Oklahoma, new york, donald trump, us, rally, america, டிரம்ப், பிரச்சாரம்,பேரணி, எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆக்லஹோமா மாகாணத்தின் துல்சா பகுதியில் டிரம்ப் பிரசார ஊர்வலம் நடத்த உள்ளார். இதில் போராட்டம் நடத்துவோருக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருடர்கள், மூன்றாம் தரக் குடிமக்கள் ஆகியோருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நியூயார்க், சியேட்டல், மினியாபாலிஸ் ஆகிய இடங்களில் தாங்கள் நடத்தப்படுவதுபோல ஆக்லஹோமாவின் நடத்தப்படமாட்டீர்கள். இங்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றுள்ளார். டிரம்பின் செய்தித் தொடர்பாளர் மார்க் லோட்டர் இதுகுறித்து பேசுகையில் அமைதியாக போராடுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுக்கவில்லை. போராட்டம் என்கிற பெயரில் வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றார் என விளக்கம் அளித்துள்ளார்.


latest tamil news


பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே டிரம்ப் டுவீட் செய்திருந்தார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேலே மெக்கனே இதுகுறித்துப் பேசுகையில், டிரம்ப் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்துகொள்வோருக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தையே அதிபர் தெரிவித்துள்ளதாக கூறினார். இந்த பேரணியில் 1 லட்சம் டிரம்ப் ஆதரவாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தன் சுய லாபத்துக்காக கொரோனாவையும் பொருட்படுத்தாமல் டிரம்ப் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இந்தப் பேரணியை நடத்துவதாக முன்னதாக ஜோ பிடேன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X