எல்லை பிரச்னை: சிதம்பரத்தின் 10 கேள்விகள்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (105)
Share
Advertisement
சிதம்பரம், எல்லைபிரச்னை, கேள்விகள், லடாக், சீனா, இந்தியா, பிரதமர், மோடி, congress, Chidambaram, questions, PM Modi, border dispute, China, india, galwan valley

புதுடில்லி: எல்லை பிரச்னையால் சீனா ராணுவத்துடன் நடந்த மோதல் தொடர்பாக காங்., எம்.பி., சிதம்பரம், பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் 35க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., எம்.பி.,யுமான சிதம்பரம், பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
1. சீனத் ராணுவத்தினர் இந்திய நிலப்பரப்பில் ஏப்ரல் மாதத்தில் ஊடுருவிய போது அதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
2. இந்திய எல்லையிலும் இந்திய நிலப்பரப்பிலும் சீனா கட்டுமானப் பணிகளைச் செய்ததையும் உளவுத் துறை கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
3. இந்திய விண்வெளிக்கலங்கள் பூமியை நாள்தோறும் சுற்றி வானிலிருந்து படங்களைத் தொடர்ந்து அனுப்புகின்றனவே, அந்தப் படங்கள் சீன ஊடுருவலைக் காட்டவில்லையா?


latest tamil news


4. மே மாதம் 5ம் தேதி சீன ஊடுருவலை இந்திய ராணுவம் எப்படிக் கண்டுபிடித்தது?
5. மே மாதம் 5ம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ-யைத் தொடர்பு கொண்டீர்களா?
6. சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?
7. ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மவுனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மவுனம் நியாயமா?
8. இருபது வீரர்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மவுனம் கலைந்தது. இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?
9. “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
10. வூஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202004:13:44 IST Report Abuse
J.V. Iyer 2008 ல் நேரு காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெய்ஜிங்கில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனபோது, நீங்கள் உடன் இருந்தீர்களா? உங்கள் பங்கு, I mean, "பங்கு" என்ன ப.சி.? அங்கும் கமிஷனா?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
23-ஜூன்-202018:43:58 IST Report Abuse
Sampath Kumar அவர் ஊழல் பேர்வழிதான் என்றால் கோர்ட் சொல்லட்டும் கைது செய்து உள்ள தூக்கிப்போடு
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜூன்-202018:04:14 IST Report Abuse
Nagarajan D ஜாமீனில் திரியும் நீயெல்லாம் பேசுற...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X