பொது செய்தி

இந்தியா

சூரிய கிரகணம் புனிதமானது: ஒரு அறிவியல் பார்வை

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

சென்னை; சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது காலை 10: 22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது.latest tamil newsஇந்த கிரகண நேரம் மிகவும் சிறப்பானதாகும். இது நம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கிரகண நேரத்தில் நாம் சொல்லும், கேட்கும் மந்திரங்கள் நமக்கு பெரிய சக்தியை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் செய்யும் சங்கல்பம் மிக சிறப்பாக நன்மையை தருகிறது. இதற்கு முதலில் குளித்து விட்டு, ஒரு அமைதியான இடத்தில் கிழக்கு பார்த்து அமர வேண்டும்.
மேஜை, நாற்காலி, தறையில் என தங்கள் விருப்ப படி அமரலாம். 3 மணிநேரம் அமர வேண்டும் என்பதே முக்கியம். முதல் 15 நிமிடம் கண்களை மூடி மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதில் மூச்சை மெல்ல இழுத்து, மெல்ல வெளியே விடு வேண்டும். இந்த பயிற்சியால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.


latest tamil newsஇப்பயிற்சியின் போது தெரிந்தவர்கள் ஸ்லோகம் சொல்லலாம். ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலிசா, சண்டி கவசம் போன்றவற்றை தொடர்ந்து கேட்கலாம். இதனால் கேட்ட சிந்தனைகள் விலகி நமக்கு தேவையான புதிய சக்தி கிடைக்கிறது. கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, அருகில் உள்ள கோயில், அல்லது வீடுகளில் வழிபாடு செய்வது நன்மையை தரும்.இதுபற்றி வீடியோவில் சுவாமி ஆத்மானந்தநாதா விளக்கி உள்ளார்.
மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும் http:////youtu.be/VPkfNFlwliE
http:////youtu.be/MH8qIV6xLvc

முதல் பாகம்


இரண்டாம் பாகம்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-ஜூன்-202013:52:01 IST Report Abuse
Rafi இரவும் பகலும் மாறி, மாறி வருவதிலும், சூரியன் சந்திரன் மற்றும் வானங்கள்
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
21-ஜூன்-202010:07:33 IST Report Abuse
Ray பூமியை மையமாக கொண்டு சூரியனையும் நவ கிரகங்களில் ஒன்றாய் கணக்கிடுகிறோமே ஆனால் இப்போது சூரியனை பூமி சுற்றுவதாக சொல்கிறார்கள் விளக்குக
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-ஜூன்-202022:48:22 IST Report Abuse
J.Isaac இயற்கையான நிகழ்வு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X