பொது செய்தி

இந்தியா

சொந்த கிராமத்தை முன்னேற்ற விரும்பும் மக்கள்: பிரதமர்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பிரதமர் மோடி, கிராமப்புறம், வேலைவாய்ப்பு, Garib Kalyan Rojgar Abhiyaan, PM Modi, Prime Minister, Narendra Modi,  migrant workers, coronavirus-induced lockdown,  video conference, Telihar village of Bihar's Khagaria district,

புதுடில்லி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே வேலை வழங்கும் வகையில் கரீப் கல்யாண் ரோஜ்ஹார் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பேசும் போது, வெளிமாநிலங்களில் வேலைபார்த்துவிட்டு, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்கள், தங்களது கிராமத்தை முன்னேற்ற விரும்புவதாக குறிப்பிட்டார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலை வழங்கவும் 'கரீப் கல்யாண் ரோஜ்ஹார்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், பீஹார், உ.பி., ம.பி., ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில், 116 மாவட்டங்களில் 25 வகையிலான பணிகள் மேற்கொள்ளப்படும். மொத்தம் 125 நாட்கள் இந்த பணி நடக்கும். இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். பீஹார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில், இந்த திட்டத்தின் கீழ் நடக்கும் பணியை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


latest tamil news


திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. ஏழைகளின் வாழ்வாதாரம் மற்றும் நலனுக்கான திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம், கிராமத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தான், ஊரடங்கு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் தங்களின் திறன் மற்றும் தகுதி மூலம் தங்களது கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என விரும்புகின்றனர். உங்களின் எண்ணங்களையும், தேவைகளையும் நாடு புரிந்து கொள்கிறது. 6 மாநிலங்களில், 116 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

லடாக்கில் சீன படையினருடன் நடந்த மோதலில் பீஹார் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்கள் காட்டிய தைரியம் பெருமை அளிக்க வைக்கிறது.லடாக்கில் உயிர் தியாகம் செய்த வீரர்களை கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது. பீஹார் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்களின் தைரியத்தை க ண்டு, ஒவ்வொரு பீஹாரியும் பெருமைப்பட வேண்டும். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தைரியமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் கதாரியா மாவட்டத்தில், இந்த திட்டத்தில் பணியாற்றுபவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
20-ஜூன்-202021:33:15 IST Report Abuse
siriyaar நீங்க கடையை மூடிட்டா கண்டிப்பா செய்வாங்க, கடை இருந்த நாட்டை காட்டி கூட கொடுப்பாங்க குவார்ட்டர் கொடுத்தா
Rate this:
Cancel
20-ஜூன்-202016:39:35 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா ஆப்பு, கோரோணா முடிஞ்சா எல்லாருக்கும் வேற ஊரா இருக்கும். உன்னை போன்றவர்களுக்கு மூர்க்க நாடுகளில் ஒன்று தான். பயணம் சொல்லி தயாரா இரு.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூன்-202016:15:22 IST Report Abuse
sundarsvpr நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டுஇருக்கிறது. காரணம் திட்டம் ஏ வர்கள் பலன்களுக்கு தீட்டப்படுகிறதோ அவர்கள் முழுமையாய் அனுபவிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X