பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் சாதனை

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020
Share
Advertisement
தூத்துக்குடி, துறைமுகம், நிலக்கரி, இறக்குமதி, சாதனை, Thoothukudi Port, 
coal handling,  coal,

தூத்துக்குடி: ஒரே நாளில் அதிக அளவு நிலக்கரி இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகம் சாதனை படைத்தது.

தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் அனல் மின்நிலையங்களுக்கு மின்உற்பத்திக்கு பயன்படும் நிலக்கரி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியாவின் ‛தஞ்சங் பரா' துறைமுகத்தில் இருந்து எம்.வி.மைசிர்னி என்ற கப்பல், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தது.


latest tamil news



அதில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்காக 76 ஆயிரத்து 999 டன் நிலக்கரி இருந்தது. கப்பலில் இருந்து துறைமுகத்திற்குள் இம்கோலா நிறுவனத்தினர் கிரேன்கள் மூலம் 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்து 785 டன் நிலக்கரியை இறக்கினர். இதன்மூலம் ஒரே நாளில் அதிக எடை அளவு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் ஒரே நாளில் 55 ஆயிரத்து 363 டன் நிலக்கரி இறக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இதனை மேற்கொண்ட ஊழியர்களை துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் பாராட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X