பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் 10 பறக்கும் படை

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை, கொரோனா, குழு,  அதிகாரிகள், MADURAI, COVID-19, coronavirus, corona, coronavirus outbreak, covid-19 pandemic, Co-ordination panels, tn news, tamil nadu, tn district, corona in tn, tn fights corona

மதுரை: மதுரையில், அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தாசில்தார், போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 104 பேருக்கு பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு, 550 ஆக அதிகரித்தது. இதனையடுத்து தொற்றை, கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மாவட்ட அளவில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிலும் தலா ஒரு தாசில்தார், போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் இடம்பெறுவார்.


latest tamil news



இந்த குழுவானது 24 மணி நேரமும் செயல்படுவதுடன், தனி மனித இடைவெளி இல்லாமல் இருக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், 8 மணிக்கு மேல் செயல்படும் கடைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும். முதலில், மாநகராட்சியின் 100 வார்டுகளில் இந்த குழு செயல்படும். பின்னர், புறநகர் பகுதிகளில் செயல்படும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-202019:48:47 IST Report Abuse
சுரேஷ் குமார் இதெல்லாம் கொஞ்சம் கூட உதவாது. முழு ஊரடங்கு ‌மட்டுமே பயன் தரும். அதிகாரிகளும் வண்டிகளில் இருந்து தான் கண்காணிக்க முடியும். அவர்களுக்கும் மற்றவர்கள் அருகில் செல்ல சிறிதளவேனும் பயம் இருக்கும். பறக்கும் படை பின்னாடியே காவலர்களும் செல்ல வேண்டும். அவர்களது வேலையும் பாதிப்பு ஏற்படும். வருமுன் காப்பது மிகுந்த பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. தினமலர் தன் பங்கிற்கு ஊரடங்கை வலியுறுத்தி செய்திகள் வெளியிட வேண்டுகிறேன். எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியம்மன் தான் மதுரையை காக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X