கோவையில் தனியார் பஸ் பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் தனியார் பஸ் பறிமுதல்

Added : ஜூன் 20, 2020
Share

கோவை: அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்ததாக தனியார் பஸ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே மாவட்ட எல்லைப்பகுதியில் , கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவைக்கு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.இதனையடுத்து பஸ்சை சோதனையிட்ட அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ராஜாமணியின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பஸ்சை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X