பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா; பாதிப்பு 56 ஆயிரத்தை தாண்டியது

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 20) ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், பலி எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 64 பேர் வெளிமாநிலங்கள்
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 20) ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆகவும், பலி எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 64 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 56,845 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 85 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,186 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,61,211 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil news


இன்று சென்னையில் 30 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 24 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 31,316 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
21-ஜூன்-202017:38:46 IST Report Abuse
Guruvayur Mukundan டிஸ்சார்ஜ் ஆகி போனவர்களையும் சேர்த்து ஏன் கணக்கில் எடுத்து ஒரு பயங்கர எண்ணிக்கைய கொடுத்து மக்களை பயமுறுத்தி வருகிறீர்கள், என்று எனக்கு புரியவில்லை . யாராவது கொஞ்சம் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
jay - toronto,கனடா
21-ஜூன்-202014:54:25 IST Report Abuse
jay அன்னிய மதத்தை பற்றப்பதே ,,, அன்னிய நோய் உன் மாததைபோல கெடுதல். அமெரிக்காவில் கருப்பு க்றெஸ்தவர் வெள்ளை க்றிஸ் கொலை பனுறா ன் ,, இத்தக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாய்
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-202000:34:16 IST Report Abuse
Dr.C.S.Rangarajan திடமான நம்பிக்கை மலைதனையும் அசைக்கக்கூடியது என்றார் ஏசுபிரான். உறுதியான நம்பிக்கை நம்பிக்கைக்கு வித்தாகும் என்பதுபோல், பயம், பயம் பெறுக விசிறக்கூடும் என்பதால் பயத்தை கண்டு பயப்படுத்தல் மனதளர்ச்சி விலக வழிவகுக்கும் என்பது உளநூல் அறிவுறுத்தல். . தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட மாற்றுப்பட்டது. தெய்வ நம்பிக்கை உண்டு. தெய்வநம்பிக்கை உண்டென்றாலும் இல்லை என்றோருடன் உறவுமுண்டு. நம்பிக்கைக்கும் ஆடி தள்ளுபடிபோல் 'தள்ளுபடி' தரப்படுவதால் ஊரடங்கல், சமூக விலகல் 'கண்ணாமூச்சி' விளையாடுவதுபோல் கடைப்பிடிப்பதில் தளர்ச்சி ஏற்படுவதால் நோயில் தளர்ச்சி ஏற்படவழியே இல்லை 'சரியான மருந்து சரியான நேரத்தில்' தரும் காலம் வரும் வரை. கண்ணுக்கு தெரியாத ஒன்று 'சக்தி' உடையது என்ற விளக்கம் தெரியாதவர்க்கும் தெரியும் நேரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X