பொது செய்தி

தமிழ்நாடு

வெடிவைத்து விவசாயி கொலை: தி.மு.க., - எம்.பி., குற்றச்சாட்டு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: ரேடியோவில், வெடிபொருள் வைத்து, விவசாயி கொல்லப்பட்டதாக, தி.மு.க., - எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.
பனமரத்துப்பட்டி அருகே, தும்பல்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணி, 50, சாலையில் கிடந்த மர்ம எலக்ட்ரானிக் சாதனத்தை வீட்டுக்கு எடுத்துச்சென்றார். அதற்கு, மின் இணைப்பு கொடுத்து இயக்கிய போது வெடித்தது. அதில், உடல்சிதறி மணி பலியானார். வீட்டில் இருந்த, 12 வயது சிறுமி உள்பட மூவர் படுகாயமடைந்தனர். நேற்று, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., பார்த்திபன், மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், மணி வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின், எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், ''காலையில், மணி அரளி பூ பறிக்க செல்லும் வழியில், சக்தி வாய்ந்த வெடிபொருளை ரேடியோ பெட்டியில் வைத்து சென்றுள்ளனர். அது வெடிபொருள் என தெரியாமல், வீட்டுக்கு எடுத்துச்சென்று பார்த்தபோது வெடித்துள்ளது. 2 கி.மீ., தூரம் சத்தம் கேட்டுள்ளது. ஆனால், இது ஒரு விபத்தாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மாறாக திட்டமிட்ட கொலை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X