பொது செய்தி

தமிழ்நாடு

பிறந்தநாள் கொண்டாட முயற்சி: 7 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தீபக், 36; இவர், தன் பிறந்த நாளை, நண்பர்களுடன் கொண்டாட, நேற்று முடிவு செய்தார். அதில், ரவுடிகள் பங்கேற்க இருப்பதாக, அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், அங்கு சென்றபோது, போக்குவரத்துக்கு இடையூறாக, எட்டு வாகனங்கள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்தன. வீட்டுக்குள், 'கேக்' வைத்திருந்தனர். இதில் பங்கேற்க வந்த, சின்னதிருப்பதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 48, கணேஷ், 39, பிள்ளையார் நகர் கார்த்திக் சந்தோஷ், 36, அயூப், 35, பிரேம், 25, சிவசுப்ரமணியன், 35, தீபக் ஆகியோரை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அவர்களின் எட்டு வாகனங்கள், கேக்கையும், பறிமுதல் செய்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்ட விரோதமாக கூடியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ஏழு பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X