தனியார் துறையில் வேலைக்கு புது வசதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் துறையில் வேலைக்கு புது வசதி

Added : ஜூன் 20, 2020
Share

சேலம்: தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற புதுவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், வேலை தேடும் இளைஞர், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களை, இணைய வழியாக இணைத்து, வேலைவாய்ப்பு பெற்றுத்தர, 'தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்' தொடங்கப்பட்டுள்ளது. அதன், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய முகவரி, கடந்த, 16ல் தொடங்கப்பட்டது. தனியார் துறையில் பணிபுரிய விரும்புவோர், இந்த முகவரியில், கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட முழு விபரங்களை பதிவு செய்து, பணி வாய்ப்பு பெறலாம். சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள், தங்கள் காலி பணியிடங்களை, இந்த இணையத்தில் பதிவேற்றி, தகுதியானவர்களை தேர்வு செய்து நியமிக்க, இந்த இணையதளம் வழிவகை செய்கிறது. வேலை அளிப்போர், வேலை பெறுவோர், இச்சேவையை கட்டணமின்றி இலவசமாக பெறலாம். இந்த இணையதளம் மூலம், இணையவழி நேர்காணல், பணி நியமன வசதிகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X