பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், கல்லாநத்தத்தைச் சேர்ந்த, அங்கமுத்து மகன் வெங்கடேசன், 30; ஆந்திராவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். முட்டல் பகுதியைச் சேர்ந்த, ராஜேந்திரன் மகள் ராதிகா, 23. எம்.சி.ஏ., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கும், வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், வீட்டில் இருந்து வெளியேறிய ஜோடி, சீலியம்பட்டி, பச்சையம்மன் கோவிலில் திருமணம் செய்தனர். நேற்று, ஆத்தூர் ஊரக போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருவரது பெற்றோரையும் அழைத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்ணின் பெற்றோர், திருமணத்தை ஏற்க மறுத்தனர். இதனால், வெங்கடேசனுடன், ராதிகாவை போலீசார் அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X