பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் உள்பட 10 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

சேலம்: ராணுவ வீரர் உள்பட, 10 பேருக்கு, 'கொரோனா' தொற்று உறுதியானது. சென்னையில் இருந்து, நேற்று முன்தினம், 46 பயணியர், விமானம் மூலம் சேலம் வந்தனர். அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கோவாவைச் சேர்ந்த, 25 வயதுடையவர், தஞ்சாவூர், 21 வயதுடையவர், அசாமிலிருந்து தர்மபுரி செல்ல வந்த, 51 வயது ராணுவ வீரர், மேகாலயாவிலிருந்து, இடைப்பாடி செல்ல வந்த, 23 வயதுடையவர், திருவள்ளூரைச் சேர்ந்த, 23 வயதுடையவருக்கு தொற்று இருப்பது, நேற்று காலை உறுதியானது. இதனால், கருப்பூர் தனிமை மையத்தில் இருந்த அவர்களை, சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
பொறியாளரின் மனைவி: இடைப்பாடி, க.புதூரைச் சேர்ந்தவர், 37 வயது பெண். இவரது கணவர், பெங்களூருவில் கணினி பொறியாளராக பணிபுரிகிறார். இவர்கள், தங்கள் குழந்தைகள் இருவருடன், நேற்று முன்தினம், காரில், இடைப்பாடி வந்தனர். முன்னதாக, சேலம் மாவட்ட எல்லை, கருப்பூரில் நுழைந்தபோது, நான்கு பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தைகளை வைத்திருந்ததால், வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். நேற்று, பெண்ணுக்கு தொற்று இருந்தது உறுதியானது. இதனால், சேலம் அரசு மருத்துவமனை, 'கொரோனா' வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர், குழந்தைகளும், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனியார் நிறுவன ஊழியர்: ஆத்தூர் அடுத்த, தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த, 28, 26 வயது சகோதரர்கள், சென்னை, வேளச்சேரியில், தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கடந்த, 16ல், அங்கிருந்து தனித்தனியே, இரு பைக்குகளில் சொந்த ஊர் வந்தனர். மறுநாள், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், 28 வயதுடையவருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. அவரை, நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருடன் தொடர்பில் இருந்த மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஐ.டி., ஊழியர்: சங்ககிரி, வடுகப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, 28 வயதுடையவர், சென்னையில், தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம், சென்னையிலிருந்து ரயில் மூலம், சேலம் வந்தார். ரயில்வே ஸ்டேஷனில், சேலம் சுகாதாரத்துறையினர், அவருக்கு சளி மாதிரி எடுத்து, அவரது வீட்டுக்கு அனுப்பினார். நேற்று, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சங்ககிரி சுகாதாரத்துறையினர், அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


* செங்கல்பட்டில் இருந்து, சங்ககிரி அருகே, வைகுந்தம், வெள்ளையம்பாளையத்துக்கு, நேற்று வந்த, 34 வயது ஆண், 50 வயது மூதாட்டிக்கு, சுகாதாரத்துறையினர் சளி மாதிரி பரிசோதித்ததில், தொற்று உறுதியானது. இதனால், இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

11 பேர் குணம்: சேலம் மாவட்ட, மாநகர் எல்லைகளில், நடக்கும் பரிசோதனையில், நோய் தொற்று கண்டறியப்படும் நபர்கள், சேலம், அரசு மருத்துமனையில், தனிமையில் உள்ளனர். அவர்களில், காடையாம்பட்டியைச் சேர்ந்த, 25 வயது ஆண், இடைப்பாடி, 23 வயது ஆண், சென்னை, மேடவாக்கம், 54 வயது முதியவர், ஆட்டையாம்பட்டி, 56 வயது முதியவர், சேலம், 38 வயது ஆண், 45 வயது ஆண், சோளம்பள்ளம், 29 வயது பெண், ரெட்டிப்பட்டி, 52 வயது பெண், 68 வயது பெண், 23 வயது பெண், சின்னமோட்டூர், 56 வயது முதியவர் என, 11 பேர் குணமடைந்து, நேற்று, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X