பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் இருப்பிடத்துக்கு சென்று பரிசோதிக்க நடமாடும் மருத்துவ குழு வாகனம் தயார்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

சேலம்: நடமாடும் மருத்துவ குழு விழிப்புணர்வு வாகனம் மூலம், மக்கள் இருப்பிடத்துக்கு சென்று பரிசோதனை செய்யும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம், கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவ குழு விழிப்புணர்வு வாகனம், கிருமிநாசினி தெளிக்கும் நவீன இயந்திரங்களை கொடியசைத்து, கலெக்டர் ராமன், நேற்று தொடங்கி வைத்தார். பின், அவர், கூறியதாவது: முகக்கவசம் அணியாதவர், முதல் முறையாக கண்டறியப்பட்டால், 100 ரூபாய், மறுமுறை கண்டறிந்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மூன்றாம் முறை கண்டறிந்தால், போலீசார் மூலம் கைது செய்யப்படுவர். 'லார்சன்ஸ் அன்ட் டியூப்ரோ' நிறுவனம் சார்பில், கிருமிநாசனி தெளிப்பு பணிக்கு, நான்கு சக்கர வாகனம் வழங்கி இயக்கி வைக்கப்பட்டுள்ளது. விழிப்பணர்வு வாகனத்தில், நவீன ஸ்கேன் கருவி, ரத்தப்பரிசோதனை, சளி தடவல் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டு, மருத்துவர், செவிலியர் அடங்கிய குழு, இந்த வாகனத்தில் சென்று, மக்கள் இருப்பிட பகுதியில் பரிசோதனை செய்வர். மக்கள், தங்கள் பகுதி, வீடுகள் அருகே, வெளி மாநில, மாவட்ட நபர்கள் தங்கியிருப்பது தெரிந்தால், உடனே, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி, 0427 - 2450022, 2450023, 2450498 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை 416 பேருக்கு தொற்று: சேலம், கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை, 416 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, 35 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள அனைவரும், வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்தவர்கள், சொந்த ஊர் திரும்பியவர்கள். ஊரடங்கில், தளர்வு ஏற்படுத்திய பின், தொற்று கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. மாவட்ட, மாநகர எல்லையில், முழு தடுப்பு அமைத்து, தீவிர வாகன தணிக்கை நடக்கிறது. நோய் தொற்று இல்லாதவர் மட்டும், சேலத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நடமாடும் விழிப்புணர்வு மருத்துவ வாகனம் மூலம், நோய் அறிகுறி இருப்பவரை கண்டறிந்து, அவர்களுக்கு, முழு பரிசோதனை நடத்தி, தொற்று உறுதிப்படுத்தப்படும். அப்பணி, மாநகராட்சி பகுதியில், நான்கு நாளில் முடிக்கப்படும். அதேபோல், இதர பகுதிகளிலும், நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்படும். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இருசக்கர வாகனங்களில், சேலம் வந்த, 220க்கும் அதிகமானோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X