பொது செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை வழக்கில் சிக்கிய மெக்கானிக்குக்கு தொற்று: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் தனிமை

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஆத்தூர்: பெண்ணை கொன்ற வழக்கில் சிக்கிய மோட்டார் மெக்கானிக்குக்கு, 'கொரோனா' தொற்று ஏற்பட்டதால், இன்ஸ்பெக்டர் உள்பட, 9 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஏழாவது வார்டைச் சேர்ந்தவர் மணி, 55. இவரது கணவர் இறந்த பின், தனியாக வசித்தார். கடந்த, 17ல், இவரது வீட்டில் துர்நாற்றம் வீசியதால், ஏத்தாப்பூர் போலீசாருக்கு, மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டை திறந்தபோது, மர்மமான முறையில், மணி இறந்து கிடந்தார். சந்தேக மரண வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்ததில், அதே ஊரைச்சேர்ந்த, 42 வயதுடைய, மோட்டார் மெக்கானிக்குடன், கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. நேற்று முன்தினம், அவரை பிடித்து விசாரித்தபோது, 'கடந்த, 15ல், மணியிடம், பணம் கேட்டேன். அவர் தர மறுத்து, வாக்குவாதம் செய்ததோடு, செருப்பால் அடித்தார். அந்த ஆத்திரத்தில், அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்' என வாக்குமூலம் அளித்தார். போலீசார், கொலை வழக்குப்பதிந்து, மெக்கானிக்கை கைது செய்து, மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், தொற்று இருப்பது, நேற்று உறுதியானதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, மெக்கானிக்கை, ஏத்தாப்பூர் ஸ்டேஷன், பெரியகிருஷ்ணாபுரம் முகாமில் வைத்து விசாரித்தனர். அதனால், அந்த இரு இடத்தில், சுகாதாரத்துறையினர், கிருமிநாசினி தெளித்து, நோய் தடுப்பு பணி மேற்கொண்டனர். ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முழுதும், கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். இரு நாள், போலீசார் ஸ்டேஷனுக்குள் செல்ல வேண்டாம்; மக்களும் புகார், விசாரணைக்கு வரவேண்டாம் என, எஸ்.பி., தீபாகானிகேர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கைதானவருடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்பட ஒன்பது போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், வாழப்பாடி டி.எஸ்.பி., ஏத்தாப்பூர் போலீசார், 22 பேர், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கொலை வழக்கில் கைதானவர், சில நாளுக்கு முன், சேலம் சென்று வந்தார். இறந்த பெண்ணின், 25 வயது மகள், சேலம், பொன்னம்மாபேட்டையில் இருந்து, பெத்தநாயக்கன்பாளையம் வந்தார். இவர்களில் யார் மூலம், மெக்கானிக்குக்கு, 'கொரோனா' ஏற்பட்டது என, விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X