சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் பிரச்னையில் தகராறு: 3 பேர் கைது; 7 பேருக்கு வலை

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

மல்லியக்கரை: ஆத்தூர், கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதசாமி, 38. அதே பகுதியில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆக்கிரமிப்பு குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோருடன் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், மஞ்சுநாதசாமியின் சகோதரி தனலட்சுமி, மல்லியக்கரை போலீசில், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தப்பட்டதாக புகார் அளித்தார். அதன்படி, ராமகோவிந்தன், 62, ஜீவா, 49, ஆகியோரை கைது செய்த போலீசார், சண்முகசுந்தரம், சக்திவேல், தர்மன், சீனிவாசனை தேடுகின்றனர். சண்முகசுந்தரம் புகார்படி, மஞ்சுநாதசாமியின் தந்தை குமாரசாமி, 72, என்பவரை கைது செய்த போலீசார், மஞ்சுநாதசுவாமி, அவரது தாய் சுப்பம்மாள், சகோதரி தனலட்சுமியை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X