இ-பாஸ் இன்றி வருவோரை பிடிக்க கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு| Vehicle checks intensified on Coimbatore border, valid e-passes mandatory | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இன்றி வருவோரை பிடிக்க கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (1)
Share

கோவை: நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருந்த போது, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், வெளிநாடு, பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களால், கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.latest tamil news
குறிப்பாக, சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் சாலை மார்க்கமாக பலரும் வருகின்றனர். அவர்களால், பாதிப்பு அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, இ-பாஸ் இன்றி வருவோரை பிடிக்க மாவட்ட எல்லைப் பகுதிகளான கருமத்தம்பட்டி, வாளையார் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news
தனியார் பஸ் பறிமுதல்கோவை கலெக்டர் ராஜாமணி தலைமையிலான குழு, தெக்கலூரில் ஆய்வு மேற்கொண்ட போது, அதிகளவிலான பயணிகளுடன், திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பயணிகளை மாற்று வாகனங்களில் கோவை அனுப்பினர். 'விதிமீறி கூடுதல் பயணிகளுடன் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news

வழக்கு பதிவு, வாகனம் பறிமுதல்மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் 13 சோதனைச் சாவடிகளிலும், மாவட்ட எல்லையில் 13 சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாளையார், கணியூர் சோதனை சாவடிகளில் டி.எஸ்.பி., தலைமையிலும், கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இ-பாஸ் இன்றி, முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன,'' என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X